“பெ.சண்முகம் குறித்த முரசொலி விமர்சனம் அநாகரிகத்தின் உச்சம்” - அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

Updated on
1 min read

சென்னை: “பெ.சண்முகம் குறித்து முரசொலி பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது அநாகரிகத்தின் உச்சம். பெ.சண்முகம் மீதான விமர்சனத்தை தவெக சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். சிவப்புத் துண்டை இதுபோல சிறுமை செய்தால் இரட்டை போர் யானை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குறித்து முரசொலி பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளவே முடியாதது, அநாகரிகத்தின் உச்சம்.

தனது வாழ்வையும், வசதிகளையும் ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்த மாமனிதர் பெ.சண்முகம். அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், டானிக் குடித்து வளர்ந்தவர் என்றெல்லாம் அவரை விமர்சித்துள்ளார்கள். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இதனை கடுமையாகக் கண்டித்திருப்பார்.

சி.வி.சண்முகமும், பெ.சண்முகமும் ஒன்று என சொல்லி விமர்சித்துள்ளார்கள். சி.வி.சண்முகத்தின் பெயரை சிறுமைப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பெ.சண்முகம் மீதான விமர்சனத்தை தவெக சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். சிவப்புத் துண்டை இதுபோல சிறுமை செய்தால் இரட்டைப் போர் யானை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அனைவரும் நாகரிகத்தின் எல்லையை கருதி அதோடு நிற்க வேண்டியது கடமை.

எ.வ.வேலு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. முகாந்திரத்தோடு, ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடந்துள்ளது. இதனை சட்ட ரீதியாக துணிச்சலோடு எ.வ.வேலு எதிர்கொள்ள வேண்டும். நல்ல ஆதாரத்தோடு எ.வ.வேலு சிக்கியுள்ளார். ஒருவர் சிக்கியுள்ளார், அடுத்து ஒவ்வொருவராக வர வேண்டும். தவறு செய்தவர்களை முதல்வர் விஜய் விடமாட்டார்” என்றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜ்மோகன்</p></div>
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் - முதல்வர் விஜய் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in