சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் எம்எஸ்எம்இ திட்டங்கள்: பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் எம்எஸ்எம்இ திட்டங்கள்: பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் எம்எஸ்எம்இ திட்​டங்​களை பொது​மக்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும் என மாவட்ட ஆட்சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாவட்​டத்​தில் தமிழக அரசின் குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் (எம்​எஸ்​எம்இ) சார்​பில் சமூக மற்​றும் பொருளா​தார ரீதி​யாக நலிவடைந்த வேலை​யில்லா இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு உரு​வாக்​கும் திட்​டம் மூலம் 25 சதவீத மானி​யத்​துடன் ரூ.15 லட்​சம் வரை வங்​கிக் கடனும், புதிய தொழில்​முனை​வோர் மற்​றும் நிறுவன மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் கீழ் படித்த முதல் தலை​முறை இளைஞர்​களுக்கு தொழில் முனை​வோர் பயிற்சி அளித்​து, உற்​பத்தி மற்​றும் சேவை நிறு​வனங்​கள் அமைக்க 25 சதவீத மானி​யத்​துடன் ரூ.5 கோடி வரை வங்​கிக் கடனும் வழங்​கப்​படு​கிறது.

இதே​போல் அண்​ணல் அம்​பேத்​கர் தொழில் முன்​னோடிகள் திட்​டத்​தின் மூலம் எஸ்​சி, எஸ்டி தனி​நபர், கூட்​டாண்மை நிறு​வனங்​கள், அந்த சமூகங்​களை சார்ந்த நிறு​வனங்​கள், பங்​கு​தா​ரர்​கள் வரையறுக்​கப்​பட்ட நிறு​வனங்​களுக்கு 35 சதவீத மானி​யத்​துடன், அதாவது அதி​கபட்​ச​மாக ரூ.1 கோடி வரை கூடிய வங்​கிக் கடனும், கலைஞர் கைவினை திட்​டத்​தின் கீழ் கைவினைஞர்​களை தொழில்​முனை​வோர் மேம்​பாட்டு பயிற்​சி​யின் மூலம் அடுத்த கட்​டத்​துக்கு மாற்​று​வதற்​காக 25 சதவீத மானி​யத்​துடன் ரூ.3 லட்​சம் வரை வங்​கிக்​கட​னும் அளிக்​கப்​படு​கின்​றன.

இதுத​விர தமிழ்​நாடு மகளிர் தொழில் முனை​வோர் மேம்​பாட்​டுத் திட்​டம் வாயி​லாக பெண் தொழில் முனை​வோர்​களுக்கு 25 சதவீத மானி​யத்​துடன் ரூ.10 லட்​சம் வரை வங்​கிக்கடன் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த திட்​டங்​களுக்கு www.msmeonline.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பித்து பொது​மக்​கள் பயன்​பெறு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறது. கூடு​தல் விவரங்​களுக்கு கிண்​டி​யில் உள்ள தொழில் வணி​கத்​துறை மண்டல இணை இயக்​குநரை தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in