எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.

Updated on
1 min read

சென்னை: கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார். இதன்​மூலம் காலி தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக படு​தோல்வி அடைந்​தது. இதையடுத்து அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் போர்க்​கொடி தூக்​கினர். சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் 25 பேரும் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இதனால், அவர்​களின் கட்சிப் பொறுப்​பு​கள் பறிக்​கப்​பட்​டன. அதைத் தொடர்ந்​து, பழனி​சாமி​யுடன் சமா​தான​மாகினர்.

இருப்​பினும் அவர்​கள் ஏற்​கெனவே வகித்த கட்​சிப் பதவி​கள் திரும்ப வழங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே மரகதம் குமர​வேல், ஜெயக்​கு​மார், சத்​ய​பா​மா, இசக்கி சுப்​பையா ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து, தவெக​வில் இணைந்​தனர். தொடர்ந்து விராலிமலை எம்​எல்ஏ சி.​விஜய​பாஸ்​கரும் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். அவரும் தவெக​வில் இணை​ய உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்​நிலை​யில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜி​னாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகரிடம் வழங்​கி​னார். அவரின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​ப​தாக பேர​வைத் ​தலை​வர் பிர​பாகரும் உடனே அறி​வித்​தார்.

இதுகுறித்து சட்​டப்​பேர​வைத் தலை​வர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், ‘‘சட்​டப்​பேரவை விதி 21-ன்​ படி கரூர் தொகுதி எம்​எல்ஏ எம்​.ஆர்​.​ விஜய​பாஸ்​கர், தனது பதவி வில​கல் கடிதத்​தை, தனது கைப்பட எழுதி என்​னிடம் அளித்​துள்​ளார். அந்த கடிதம் பேரவை விதி 22-ன்​படிமுறை​யாக உள்​ள​தால் ஏற்​றுக் கொள்​கிறேன்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது. சில நாட்​களுக்கு முன்பு எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரை அதி​முக​வின் கொள்​கைப் பரப்பு இணைச் செய​லா​ள​ராக பழனி​சாமி நியமித்​தார்.

ஆனாலும், கரூர் மாவட்​டச் செய​லா​ளர் பதவி அவருக்கு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக கடும் அதிருப்​தி​யில் இருந்த அவர், தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். விரை​வில் தவெக​வில் அவர் சேர​உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா மூலம், சட்​டப்​பேர​வை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​களின் பலம் 41 ஆக குறைந்​துள்​ளது. காலி​யான தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.</p></div>
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றார்: ‘தொட்டால் திருப்பி அடிப்போம்’ என ஆவேசம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in