அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Updated on
1 min read

கரூர்: அ​தி​முக​வில் இருந்து வில​கியது ஏன் என்​பது குறி்த்து முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் விளக்​கம் அளித்​துள்​ளார்.

கரூர் தொகுதி எம்​எல்ஏ பதவியை முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று முன்​தினம் ராஜி​னாமா செய்​தார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்​பட்ட அத்​தனை நெருக்​கடி நேரங்​களி​லும் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பின்​னால் உறு​தியாக நின்​றேன்.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில் என் மீது 43 பொய் வழக்​கு​கள் போடப் பட்​டன. இத்​தனை தியாகங்​களுக்​கும், நான் சுமந்த வேதனை​களுக்​கும் இன்று எனக்கு பரிசாக கிடைத்​திருப்​பது நெஞ்​சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்​டுமே.

இத்​தனை ஆண்​டு​கள் நாம் யாரை எதிர்த்து யாருடைய மக்​கள் விரோத, அராஜக ஆட்​சியை வீழ்த்த இத்​தனை வழக்​கு​களை​யும், ரணங்​களை​யும் நம் உடம்​பில் ஏந்​தினோமோ, இன்று அதே தீய சக்​தி​களு​டன் கைகோத்​து, அவர்​கள் தயவுடன் ஆட்​சிக் கட்​டிலில் அமர தலைமை முற்​பட்​டதைக் கண்டு என் மனம் ரத்​தக்

கண்​ணீர் வடிக்​கிறது. எம்​ஜிஆர், ஜெயலலி​தா​வின் அரசி​யல் வாரிசுகள் தீய சக்தி திமுக​வுடன் எப்​படி கைகோக்க முடி​யும்?

பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி முன்​மொழிந்த அந்த சமரச முடிவுக்​குத் தான் எதி​ராக நின்​றோமே தவிர, அவரது தலை​மைக்கு ஒரு​போதும் நாங்​கள் எதி​ராக நின்​ற​தில்​லை. பழனி​சாமியைத் தான் இந்த இயக்​கத்​தின் நிரந்தர பொதுச் செய​லா​ள​ராக நாங்​கள் உயிரைக் கொடுத்து முன்​னிறுத்​தினோம்.

ஆனால், எங்​களின் அத்​தனை எதிர்ப்​பு​களை​யும், தொண்​டர்​களின் தார்​மீக உணர்​வு​களை​யும் துச்​ச​மாக மதித்​து, அவர் எடுத்த அந்த தன்​னிச்​சை​யான முடிவு​தான் இன்று இந்த இயக்​கத்தை அழி​விலும், வேதனை​யிலும் நிறுத்​தி​யுள்​ளது.

பழனி​சாமி​யின் இந்த சந்​தர்ப்​ப​வாத நிலைப்​பாட்​டுக்கு பலி​யாக நானும் தொண்​டர்களும் தயாராக இல்​லை. எனவே, இன்று இந்த இயக்​கத்திலிருந்து மீளா கண்​ணீருட​னும், மிகுந்த மன வேதனை​யுட​னும் விடை​பெறுகிறேன். ஆனாலும், கரூர் மக்​களின் சேவக​னாக என் பயணம் என்​றும் தொடரும். இவ்​வாறு கூறியுள்​ளார்.

<div class="paragraphs"><p>முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்</p></div>
பிறப்பு குடியுரிமை தொடர்பான ட்ரம்பின் உத்தரவு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in