அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது: கனிமொழி சோமு எம்.பி. கருத்து; பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?

அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது: கனிமொழி சோமு எம்.பி. கருத்து; பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?
Updated on
1 min read

சென்னை: ​பாஜக​வுடன் திமுக நெருக்​கம் காட்டி வரு​வ​தாக அரசி​யல் வட்​டாரத்​தில் பரவலாக பேசப்​பட்டு வரும் நிலை​யில், ‘‘அரசி​யலில் எதிரி, நண்​பர் என்று யாருமே கிடை​யாது’’ என்று திமுக எம்​.பி. கனி​மொழி சோமு தெரி​வித்​திருப்​பது, கூட்​டணி குறித்த யூகங்​களை அதி​கரித்​துள்​ளது.

தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ், விசிக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது.

கூட்​ட​ணி​யில் இருந்து பிர​தான கட்​சிகள் அனைத்​தும் வில​கிய நிலை​யில், பாஜக​வுடன் திமுக திடீர் நெருக்​கம் காட்டி வரு​வ​தாக பேசப்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில், மத்​திய அரசு கொண்​டுவர உத்​தேசித்​துள்ள தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு எதி​ராக முதல்​வர் விஜய் தலை​மை​யில் 8-ம் தேதி நடை​பெற்ற எம்​.பி.க்​கள் கூட்​டத்​தை​யும் திமுக புறக்​கணித்​த​தால், அந்த மசோதா மற்​றும் மத்​திய பாஜக அரசின் ஆதரவு மனப்​பான்​மைக்கு திமுக மாறி வரு​வ​தாக கருத்து பரவி வரு​கிறது.

இந்​நிலை​யில், மறைந்த திமுக தலை​வர் கருணாநிதி 8-வது நினைவு தினத்​தையொட்​டி, சென்னை துறை​முகம் தொகு​தி​யில் நேற்று நடை​பெற்ற ரத்​த​தான முகாமை திமுக எம்​.பி. கனி​மொழி என்​விஎன் சோமு தொடங்கி வைத்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஒரு எம்​.பி.கூட இல்​லாத தவெக​வுக்கு தொகுதி மறு​வரையறை குறித்து பேசவோ, ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தவோ எந்த முகாந்​திர​மும் இல்​லை.

இந்த விஷ​யத்​தில் திமுக​விடம் அவர்​கள் ஆலோ​சனை கேட்​ப​தி​லும் தவறு இல்​லை. கூட்​ட​ணி​யில் கலந்​துபேசி, எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் அனை​வரை​யும் அழைத்​து, என்ன பேச வேண்​டும் என அலசி ஆராய்ந்து பேசி​யிருந்​தா​லும் பரவா​யில்​லை. அப்​படி எது​வும் அவர்​கள் செய்​ய​வில்​லை.

மேலும், தமிழகத்​துக்கு அதி​கப்​படி​யான நாடாளு​மன்​றத் தொகு​தி​கள் வரவேண்​டும் என்​பது​தான் எப்​போதுமே திமுக​வின் கொள்​கை​யாக இருந்​தது.

இன்று நேற்று அல்ல, தொகுதி மறு​வரையறை என்​பதை கொண்​டு​வந்த கால​கட்​டத்​தில் இருந்து இன்​று​வரை தமிழகத்​துக்கு இத்​தனை தொகு​தி​கள் வேண்​டும் என்​ப​தில் திமுக மிக தெளி​வான நிலைப்​பாட்​டில்​தான் உள்​ளது.

அதே​நேரம், அரசி​யலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடை​யாது. தமிழகத்​துக்கு எது நல்​லதோ, அது எங்​கிருந்து வந்​தா​லும் நாங்​கள் அதை கண்​டிப்​பாக ஆமோ​திப்​போம், வரவேற்​போம்.

தொகுதி மறு​வரையறை​யில் நமக்கு எவ்​வளவு அதி​கப்​படி​யான இடம் வாங்க முடி​யுமோ அதை நிச்​சய​மாக கேட்டு வாங்​கு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

கனி​மொழி சோமு இவ்​வாறு கூறியது குறித்து தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தனது எக்ஸ் வலை​தளத்​தில், ‘அப்​படி​யா, நேற்று எம்​.பி.க்​கள் கூட்​டத்​துக்கு ஏன் வரவில்லை என்ற உண்மை இப்​போ​தான் வெளியே வருது’ என்று பதி​விட்​டுள்​ளார்.

அதற்கு கனி​மொழி சோமு, ‘கூட்​டம் கூட்​டி​னால் யார் வரு​வார்​கள் என்ற புரிதல்​ இல்​லாமல்​ கூட்​டப்​பட்​ட கூட்​டம்​’ என்​று விமர்​சித்​துள்​ளார்​.

அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது: கனிமொழி சோமு எம்.பி. கருத்து; பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?
தொகுதி மறுவரையறை மசோதா ஓர் அரசியல் சதி: மாணிக்கம் தாகூர் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in