தொகுதி மறுவரையறை மசோதா ஓர் அரசியல் சதி: மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

Updated on
1 min read

சென்னை: மத்​திய பாஜக அரசு கொண்​டு​வரத் துடிக்​கும் தொகுதி மறு​வரையறை மசோதா இந்​தி​யா​வின் இறை​யாண்​மை, கூட்​டாட்​சித் தத்​து​வத்தை சீர்​குலைக்​கும் மிகப்​பெரிய அரசி​யல் சதி என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘எக்​ஸ்’ வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த ஏப்​.17-ம் தேதி இண்​டியா கூட்​ட​ணி​யால் மக்​களவை​யில் தோற்​கடிக்​கப்​பட்ட ஆபத்​தான தொகுதி மறு​வரையறை மசோ​தாவை, ‘50 சதவீத தொகுதி உயர்​வு’ என்ற ஆசையைக் காட்டி மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிக்​கிறது.

மக்​கள்​தொகையை வெற்​றிகர​மாக கட்​டுப்​படுத்தி நாட்​டின் வளர்ச்​சிக்​குப் பங்​காற்​றிய தமிழகத்​துக்கு தண்​டனை​யும், மக்​கள்​தொகையை கட்​டுப்​படுத்த தவறிய வட மாநிலங்​களுக்​குப் பரிசும் அளிப்​பது அப்​பட்​ட​மான அநீ​தி.

தொகுதி எண்​ணிக்​கையை 50 சதவீதம் உயர்த்​தி​னால், உத்​தரப் பிரதேசத்​தின் தொகு​தி​கள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழகத்​தின் தொகு​தி​கள் 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும்.

இதனால் இரு மாநிலங்​களுக்​கும் இடையி​லான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடை​யும். நாடாளு​மன்​றத்​தில் இந்த இடைவெளி அதி​கரிப்​பது தென் மாநிலங்​களின் அரசி​யல் அதி​காரத்தை நிரந்​தர​மாகப் பறித்​து​விடும்.

இந்த மசோதா இந்​தி​யா​வின் இறை​யாண்​மை, கூட்​டாட்​சித் தத்​து​வத்தை சீர்​குலைக்​கும் மிகப்​பெரிய அரசி​யல் சதி. கடந்த காலத்​தில் முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி மற்​றும் 2001-ல் வாஜ்​பாய் ஆகியோர் கொண்டு வந்த சட்​டத் திருத்​தங்​கள் மூல​மாக மக்​கள​வைத் தொகுதி எண்​ணிக்கை முடக்கி வைக்​கப்​பட்​டது.

அந்த பாது​காப்பை தகர்க்​கவே பாஜக தற்​போது முயற்​சிக்​கிறது. மேலும், சாதி​வாரிக் கணக்​கெடுப்பை முடிக்​கும் முன்பே இதை செய்​தால், பட்​டியலின, பழங்​குடி​யின மற்​றும் பெண்​களுக்​கான இடஒதுக்​கீடு தொகு​தி​களை சரி​யாக தீர்​மானிக்க முடி​யாது.

எனவே, தமிழகத்​துக்கு துரோகம் இழைக்​கும் இந்த மசோ​தாவை வீழ்த்த அனை​வரும் முன்வர வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்</em></p></div>
சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப்-2 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in