

கனிமொழி எம்.பி. | கோப்புப் படம்
சென்னை: “கொள்ளை விலையில் மின்சாரம் கொள்முதல் செய்து தமிழகத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிப்பதுதான் தவெக அரசின் ‘மாற்ற’ அரசியலா?” என்று கனிமொழி எம்.பி. விமர்சனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை என தினமும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழகத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் ‘மாற்ற’ அரசியலா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.