“திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்கள் இருக்காது” - கனி​மொழி எம்​.பி. சூசகம்

“திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்கள் இருக்காது” - கனி​மொழி எம்​.பி. சூசகம்

Published on

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​கும் ‘வெல்​லும் தமிழ் பெண்​கள்’ எனும் தலைப்​பிலான மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடு பல்​லடம் அருகே வரும் 29-ம் தேதி நடை​பெறுகிறது. இதை​யொட்​டி, காரணம்​பேட்​டை​யில் நேற்று நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்ற திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி பேசி​ய​தாவது:

தமிழ் பெண்​கள் இல்​லாமல் யாரும் வெல்ல முடி​யாது. இந்த மாநாடு மிகப்​பெரிய வெற்​றியை உறுதி செய்​யும் மாநா​டாக அமை​யும். திமுக-வுக்கு ‘மேற்​கு’ சரி​யில்லை என்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஆனால், மேற்கு என்​பது திமுக-​வின் கோட்​டை​யாகும். அதை மீட்​டெடுக்​கும் வகை​யில் இந்த மாநாடு அமை​யும். இந்த மாநாட்​டுக்​குப் பிறகு மகளிருக்கு சரிசம​மாக இடம் கிடைக்​கும்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நமக்​காக ஆட்சி செய்​கி​றார். விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புது​மைப்​பெண் திட்​டம், காலை உணவுத் திட்​டம் என எண்​ணற்ற திட்​டங்​களை நிறை​வேற்றி உள்​ளார். மகளிர் குறித்த ரீல்​ஸ்​களைப் பார்த்து தவறாக நினைக்​கக் கூடாது. தமிழக பெண்​கள் சாதனை படைப்​பவர்​கள். தேர்வு எழுதப் போகவேண்​டாம், கூட்​டத்​துக்கு வந்து நில் என்று சொல்​வது திமுக அல்ல. இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “1 லட்​சம் முதல் 2 லட்​சம் பெண்​கள் வரை இந்த மாநாட்​டில் கலந்து கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கி​றோம். மாநாட்​டில் பெண்​கள் பாது​காப்​பாக சிரமமின்றி கலந்து கொள்ள அத்​தனை ஏற்​பாடு​களை​யும் செய்து வரு​கி​றோம். தமி​ழ​கம் பெண்​களுக்கு பாது​காப்​பாக உள்​ளது என்​ப​தால், மாநாட்​டுக்கு என தனி பாது​காப்பு ஏற்​பாடு​கள் தேவை இல்​லை. எனினும், மற்ற கட்​சிகளுக்கு சொல்​லப்​படும் நிபந்​தனை​கள் எங்​களுக்​கும் பொருந்​தும். அதனை முறை​யாக பின்​பற்றி மாநாடு சிறப்​பாக நடை​பெறும்.

தமி​ழ​கத்தை எந்த வளர்ச்​சி​யும் இல்​லாத மாநில​மாக, கடன் மாநில​மாக விட்​டுச் சென்​றவர் தான் பழனி​சாமி. அதை இன்று இந்​தி​யா​வில் முதல் மாநில​மாக வளர்ந்த மாநில​மாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மாற்றி உள்​ளார். மோடி சொல்​லிய தேர்​தல் வாக்​குறு​தி​யான ரூ.15 லட்​சத்தை முதலில் கொடுக்​கட்​டும். திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கவர்ச்​சி​யான திட்​டங்​களை எதிர்​பார்க்க முடி​யாது. முன்​னேற்​றத்​துக்​கான திட்​டங்​களை, வாக்​குறு​தி​களைத் தான் வழங்​கு​வோம். மதுக்​கடைகளை தமிழ்​நாட்​டில் படிப்​படி​யாகக் குறைத்து வரு​கி​றோம். மற்ற கட்​சி​யினர் தான் கருப்​புக் கொடிக்கு அஞ்​சு​வார்​கள். நாங்​கள் கருப்​பில் இருந்து வந்​தவர்​கள். ஆகவே, எங்​களுக்கு கருப்​புக்​கொடி காட்​டி​னால், நாங்​கள் கருப்​புக்கு அஞ்ச மாட்​டோம்” என்​றார்.

இந்த நிகழ்​வில், தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித்​துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், வீட்​டு​வச​தித்​துறை அமைச்​சர் சு.​முத்​து​சாமி, மனிதவள மேலாண்​மைத் துறை அமைச்​சர் கயல்​விழி செல்​வ​ராஜ், முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி உள்​ளிட்​டோரும் திருப்​பூர், கோவை, நீல​கிரி, கரூர், நாமக்​கல், ஈரோடு ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்த மகளிரணி நிர்​வாகிகளும் பங்​கேற்​றனர்​.

“திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்கள் இருக்காது” - கனி​மொழி எம்​.பி. சூசகம்
உழைப்புக்கு உரிய அங்கீகாரம் இல்லையா? - விஜய்யின் காரை மறித்து நியாயம் கேட்ட பெண் நிர்வாகி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in