காவல் நிலையங்களுக்கான மாதாந்திர செலவுக்கு ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

காவல் நிலையங்களுக்கான மாதாந்திர செலவுக்கு ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாதம்தோறும் வழங்கப்படும் எதிர்பாரா செலவு நிதி, ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பொது அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்துள்ளதால், அதற்கான செலவினங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.

எனவே, அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும் எதிர்பாரா செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நோக்கில், காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப்பணிகளுக்கான அன்றாடச் செலவுகளை எதிர்கொள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும் எதிர்பாரா செலவு நிதி உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் விஜய் அறிவித் தார்.

அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் அங்கு பதிவாகும் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த எதிர்பாராச் செலவு நிதி ரூ.3,750-ல் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும், ரூ.8,250-ல் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

காவல் நிலையங்களுக்கான மாதாந்திர செலவுக்கு ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலே தேசவிரோதமா? - அண்ணாமலை கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in