உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.7 ஆயிரமாக உயர்வு

உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.7 ஆயிரமாக உயர்வு
Updated on: 
1 min read

சென்னை: உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் ச.கீர்த்தனா, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகையானது ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் நடப்பாண்டில் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.16.78 கோடி செலவை அரசே ஏற்கும்.

மேலும், உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூ.7 ஆயிரமாக உயர்வு
சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

X