சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தேசிய பத்திரிகை தின கொண்டாட்டம்
சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
Updated on: 
1 min read

சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை (நவ.16) யொட்டி, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்: தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

உண்மை, நேர்மை, நடுநிலை, சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் 4-ம் தூணான ஊடகத்துறையின் பணி.

நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஜனநாயகத்தின் வலிமைக்கும், சமூகத்தின் விழிப்புணர்வுக்கும் பத்திரிகை களின் பங்களிப்பு அளப்பரியது.

வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை: சமூகத்தின் குரலாகவும், மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வலிமையான கருவியாகவும் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக கடமை உணர்ச்சியோடு 4-வது தூணாக பத்திரிகை மற்றும் ஊடகத்தை செயல்படுத்தும் பத்திரிகையாளர்களின் பங்கும், பணியும், சேவையும் போற்றுதலுக்குரியது. இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை, தவாக தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் வி.எம்.எஸ். முஸ்தபா, பாஜக நிர்வாகி சரத்குமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 17 நவம்பர் 2026

X