

சென்னை போருரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை களை மேற்கொள்வதற்காக, நவீன ரோபோடிக் தொழில்நுட்ப கருவியின் பயன்பாட்டை, ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். துணைவேந்தர் மருத்துவர் உமா சேகர், இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங், பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், மருத்துவ இயக்குநர் மருத்துவர் ஆர்.பி.சுதாகர் சிங், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி.சுரேந்திரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
சென்னை: போருரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக, நவீன ரோபோடிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், ‘டா வின்சி எக்ஸ்ஐ அட்வான்ஸ்டு ரோபோடிக் சர்ஜிக்கல் சிஸ்டம்’ என்ற ரோபோடிக் தொழில்நுட்ப கருவியின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம், துணை வேந்தர் மருத்துவர் உமா சேகர், இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங், பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில் குமார்.
மருத்துவ இயக்குநர் மருத்துவர் ஆர்.பி.சுதாகர் சிங், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி.சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ரோபோடிக் கருவியில் அறுவை சிகிச்சை நிபுணருக்கான கட்டுப்பாட்டு கன்சோல், நோயாளியின் பக்கத்தில் 3 முதல் 4 ரோபோடிக் கரங்களை கொண்ட கார்ட் மற்றும் 3டி எச்டி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரின் கை அசைவுகளை உடனுக்குடன் துல்லியமாக பிரதிபலிக்க ஃபோர்ஸ் ஃபீட்பேக் உயர்தொழில்நுட்பம் உள்ளது.
சிக்கலான அறுவை சிகிச்சைகள் சாதாரண அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் இந்த ரோபோடிக் தொழில்நுட்பத்தால் நோயாளிகள் விரைவாக குணமடையலாம்.
சிறிய அளவு காயங்கள், குறைந்த நோய் தொற்றுடன், மருத்துவமனையில் குறைந்த நாட்கள் இருப்பது போன்ற பலன்கள் கிடைக்கின்றன. புரோஸ்டேட் அகற்றுதல், கருப்பை அகற்றுதல், கொலோரெக்டல் அறுவை சிகிச்சை மற்றும் இதய மார்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை துல்லியமாக செய்வதற்கு பயன்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.