தமிழகத்தில் ஆக.31 வரை மிதமான மழை வாய்ப்பு

 படம்: ம.பிரபு

படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் இன்று (ஆக.26) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் மித​மான மழை​யும், மதுரை, சிவகங்கை மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை​யும் பெய்​யக்​கூடும்.

27-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை​யும், 28-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை​யும், கடலூர், விழுப்​புரம் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் லே சான மழை பெய்​யக்​கூடும்.

29 முதல் 31-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்னலுடன் கூடிய மித​மான மழை​யும், இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை​யும் பெய்​யக்​கூடும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p> படம்: ம.பிரபு</p></div>
2010-க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in