மழை | கோப்புப் படம்
மழை | கோப்புப் படம்

வானிலை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு

Published on

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் (ஜன.14, 15) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் செவ்வாய்க்கிழமை மழை பெய்துள்ளது.

புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து-வில் 9 செ.மீ., நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை (ஜன.14 மற்றும் 15) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், புதன்கிழமை, வியாழக்கிழமை (ஜன.14 மற்றும் 15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை | கோப்புப் படம்
‘‘இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழ் கலாச்சாரம்’’ - பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in