‘டார்ச் லைட்’ தான் வேணும்! - திமுகவிடம் மநீம கோரிக்கை

‘டார்ச் லைட்’ தான் வேணும்! - திமுகவிடம் மநீம கோரிக்கை
Updated on
1 min read

சென்னை அறிவாலயத்தில் திமுக -மக்கள் நீதி மய்யம் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அப்போது, மநீம தரப்பில் 6 தொகுதிகள் கேட்கப்பட்டது. அதற்கு 2 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், உதயசூரியன் சின்னத்தில் களமிறங்க திமுக வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

பின்னர், மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென திமுக கோரிக்கை வைத்துள்ளது. கடந்த தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சுமார் 4 சதவீத வாக்குகளை ‘டார்ச்லைட்’ சின்னம் மூலம் பெற்றது.

அதனால் எங்கள் சின்னமான ‘டார்ச்லைட்’ சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதை திமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம். கமல்ஹாசன் முடிவுதான் இறுதியானது’ என்றார்.

‘டார்ச் லைட்’ தான் வேணும்! - திமுகவிடம் மநீம கோரிக்கை
மாணவி கழுத்தில் அணிந்திருந்த ‘விசில்’ - அவசர அவசரமாக அகற்றிய அதிகாரிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in