“வேறு வழியின்றி இப்போது தவெக எம்எல்ஏ கைது...” - மு.க.ஸ்டாலின் கருத்து

இடது: அருள் விக்னேஷ் | வலது: ஸ்டாலின்

இடது: அருள் விக்னேஷ் | வலது: ஸ்டாலின்

Updated on: 
1 min read

சென்னை: “சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.

அமைச்சர்கள் முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு ‘நடத்தைச் சான்றிதழ்’ வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.

பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.

உயர் நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இடது: அருள் விக்னேஷ் | வலது: ஸ்டாலின்</p></div>
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது

X