லண்டனில் இருந்து ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு
லண்டனில் இருந்து ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்
Updated on
1 min read

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேரனும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப் படிப்பை முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி தனது பட்டத்தைப் பெற்றார்.

முன்னதாக, பேரனை நேரில் வாழ்த்துவதற்காக, ஸ்டாலின் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டுச் சென்றார். மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். பின்னர், உதயநிதியும் லண்டன் சென்றார்.பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ஸ்டாலின், பேரனைக் கட்டியணைத்து வாழ்த்தினார்.

இதன்பிறகு, சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்த ஸ்டாலின், தனது பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று சென்னை திரும்புகிறார். காலை 7 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் திமுகவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

லண்டனில் இருந்து ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in