‘திமுகவுக்கு தோல்வியில் வெற்றி; தவெகவுக்கு வெற்றியில் தோல்வி’ - மு.க.ஸ்டாலின் கருத்து

‘திமுகவுக்கு தோல்வியில் வெற்றி; தவெகவுக்கு வெற்றியில் தோல்வி’ - மு.க.ஸ்டாலின் கருத்து
Updated on: 
1 min read

சென்னை: இடைத்தேர்தல் முடிவு திமுகவுக்கு தோல்வியில் வெற்றி, தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியரான முரசொலி செல்வத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கும், படத்துக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறும்போது, ‘‘இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஏற்கெனவே அறிக்கை கொடுத்துவிட்டேன். அதுவே போதுமானதாக உள்ளது. தேர்தல் குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், திமுகவைப் பொறுத்தவரை தோல்வியில் வெற்றி, தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி’’ என்றார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘கருணாநிதி நிழலில் வளர்ந்த முரசொலி செல்வம், கட்சிப் பணி செய்வதைத் தவிர வேறு எதுவும் அறியாதவர், எதையும் நாடாதவர். எனக்கு அண்ணனாகவும், ஆசானாகவும் இருந்திருக்கிறார். நெருக்கடியான நேரங்களில் ஆறுதலாகவும் இருந்திருக்கிறார். அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறேன்’’ என தெரிவித் துள்ளார்.

‘திமுகவுக்கு தோல்வியில் வெற்றி; தவெகவுக்கு வெற்றியில் தோல்வி’ - மு.க.ஸ்டாலின் கருத்து
மும்பையில் சிஜேபி போராட்டம்: நடிகர் இம்ரான் கான், நடிகை லேகா வாஷிங்டன் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in