அதிமுகவில் இணைந்தார் மு.க.அழகிரியின் ஆதரவாளர் மன்னன்!

அதிமுகவில் இணைந்தார் மு.க.அழகிரியின் ஆதரவாளர் மன்னன்!
Updated on
1 min read

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன் அதிமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன் தலைமையில், மதுரை 4-ஆம் பகுதி முன்னாள் துணைச் செயலாளர் பி. ராஜசேகர், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அன்பரசு இளங்கோ, மதுரை 26-ஆவது வட்ட முன்னாள் துணைச் செயலாளர் பிரகாஷ் ஜெயராமன், 58-ஆவது வார்டு கே. ரவிசங்கர், ஆரப்பாளையம் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ். முத்துக்குமார் (எ) கிரேவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணைந்தார் மு.க.அழகிரியின் ஆதரவாளர் மன்னன்!
“தமிழக இடைக்கால பட்ஜெட்... மேனா மினுக்கி உரை!” - பழனிசாமி விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in