“தவெக ஆட்சியில் நடக்கும் தவறுகள்...” - கனிமொழி எம்.பி. கருத்து

“தவெக ஆட்சியில் நடக்கும் தவறுகள்...” - கனிமொழி எம்.பி. கருத்து
Updated on
1 min read

தென்காசி: “திமுகவையே குறை சொல்வதால் தவெக ஆட்சியின் தவறுகளை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்” என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

அவர் இன்று தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு தாக்கல் செய்த ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே, அதைப் பற்றி இப்போது கருத்து எதுவும் சொல்வதற்கில்லை.

தவெக இப்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. அவர்கள் சரியான முறையில் ஆட்சியை நடத்த வழிமுறைகளை காண வேண்டும். திமுகவையே குறை கூறிக்கொண்டு இருப்பதால் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் தவறுகள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை எல்லாம் மக்கள் மறந்துவிட மாட்டார்கள். தவெக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து உங்களுக்கே தெரியும்” என்றார்.

“தவெக ஆட்சியில் நடக்கும் தவறுகள்...” - கனிமொழி எம்.பி. கருத்து
‘நீங்கள் முதல்வர் ஆனதையே மறந்துவிட்டு...’ - திருச்சியில் பேசிய விஜய் மீது திமுக தாக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in