3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: நெல்​லை​யில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்​கில் கூலித் தொழிலா​ளிக்கு வி​சா​ரணை நீதி​மன்​றம் வி​தித்த தூக்​குத் தண்​டனையை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உறுதி செய்​தது.

நெல்லை மேலப்​பாளை​யம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆனந்த் சேகர். கூலித் தொழிலா​ளி. திரு​மண​மாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்​ளது. கடந்த 2023-ல் 6, 7 மற்​றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்​டுக்​குள் அழைத்​துச் சென்று ஒரே நேரத்​தில் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். பின்​னர் இதை வெளியே சொன்​னால் கொலை செய்​து​விடு​வ​தாக​வும் மிரட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக பாளை​யங்​கோட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் போக்சோ வழக்​கில் ஆனந்த் சேகரை கைது செய்​தனர். இந்த வழக்கை நெல்லை நீதி​மன்​றம் வி​சா​ரித்து பிஞ்​சுக் குழந்​தைகளுக்கு கொடூர​மான முறை​யில் பாலியல் வன்​கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு மரண தண்​டனை வி​தித்​தது. பா​திக்​கப்​பட்ட மூன்று சிறுமிகளுக்​கும் அரசு சார்​பில் தலா ரூ.7 லட்​சம் இழப்​பீ​டாக வழங்க வேண்​டும் என உத்​தர​விட்​டது.

தூக்​குத் தண்​டனையை உறுதி செய்​யக்​கோரி தமிழக அரசு சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை வி​சா​ரித்து நீதிப​தி​கள் ஆனந்த் வெங்​கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வு: சமூகத்​தின் அளவீடு, பா​திக்​கப்​படக் ​கூடிய நிலை​யில் இருப்​பவர்​களைப் பாது​காப்​ப​தில்​தான் உள்​ளது. இந்த வழக்​கைப் பொருத்​தவரை குற்​ற​வாளி உடலுக்கு எதி​ராக மட்​டுமல்ல, மூன்று ஆன்​மாக்​களுக்கு எதி​ராகத் திட்​ட​மிட்டு வன்​முறையை நிகழ்த்​தி​யுள்​ளார். கொலை செய்து விடு​வ​தாக மிரட்​டி, இந்​தக் கொடூரத்​தைச் செய்​துள்​ளார். இது​போன்ற குற்​றத்​துக்கு இரக்​கம் காட்​டு​வது தவறான முன்​னு​தா​ரணம் ஆகி​விடும்.

குழந்​தைகளின் உணர்​வு​களை மலி​வாகக் கரு​தி, குற்​ற​வாளி சிறை​யில் மீதிக் காலத்தை கழிப்​பதை இந்த நீதி​மன்​றம் விரும்​ப​வில்​லை. குழந்​தைகளைப் பாது​காப்​ப​தில் சட்​டம் முது​கெலும்​பாகவே செயல்​படும். இந்த உத்​தரவு ஒரு எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். இது நீதி வழங்​கும் மற்​றும் சமூகத்​தின் ஒழுக்​கத்தை மீட்​டெடுக்​கும் முயற்​சி.

எனவே, இந்த வழக்​கில் குற்​ற​வாளிக்கு வி​திக்​கப்​பட்ட தூக்​குத் தண்​டனை உறுதி செய்​யப்​படு​கிறது. நீதி​மன்​றப் பதி​வாளர் உத்​தரவு உள்​ளிட்ட அனைத்து ஆவணங்​களி​லிருந்​தும்​ ​பாதிக்​கப்​பட்​ட குழந்​தைகளின்​ அடை​யாளத்​தை மறைக்​க வேண்​டும்​. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறி​யுள்​ளனர்​.

Santhanakoodu Festival
“இ-20 பெட்ரோல் திட்டம் ஒரு பரிசோதனை முயற்சியே; முடிவுகள் அடுத்த ஆண்டுதான் தெரியும்” - மத்திய அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in