‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் குறித்த தொழில்நுட்ப கண்காட்சி: அமைச்சர்கள் திறந்துவைத்தனர்

‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் தொடக்க விழா குறித்த கண்காட்சியை சென்னை வர்த்தக மையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கோவி.செழியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். உடன் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்லூரி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர்.

‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் தொடக்க விழா குறித்த கண்காட்சியை சென்னை வர்த்தக மையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கோவி.செழியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். உடன் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்லூரி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: ‘உலகம் உங்​கள் கையில்’ திட்​டம் தொடக்க விழா குறித்த மாணவர்​களுக்​கான பல்​வகை தொழில்​நுட்பக் கண்​காட்​சியை அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், கோவி.செழியன் ஆகியோர் சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் நேற்று தொடங்​கி​வைத்​தனர்.

தமிழகத்​தில் 10 லட்​சம் மாணவ, மாண​வியருக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், மடிக்​கணினி வழங்​கும் விழாவையொட்​டி. ஒவ்​வொரு துறை​யிலும் மாணவர்​கள் சிறந்து விளங்​கிட​வும், உலகளா​விய திறன்​களைக் கற்​றுத் தேர்ந்​திட​வும் வழி​காட்​டும் 40 அரங்​கு​களு​டன் ‘உல​கம் உங்​கள் கையில்’ திட்​டம் குறித்த பல்​வகைத் தொழில்​நுட்​பக் கண்​காட்சி சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதனைஅமைச்​சர்கள் தா.மோ.அன்​பரசன், கோவி. செழியன் தொடங்கி வைத்தனர். இந்​நிகழ்​வில், மாநிலத்​தின் பல்​வேறு துறை​கள் சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள பிரிவு வாரி​யான 40 கண்​காட்சி அரங்​கு​களில், தமிழக மாணவர்கள் உரு​வாக்​கிய புதுமை படைப்​பு​கள், பல்​வேறு துறை​சார்ந்த நிறு​வனங்​களின் தயாரிப்​பு​கள், தொழில்​நுட்ப முன்​னேற்​றங்​கள் மற்​றும் திறன் மேம்​பாட்டு முன்​னெடுப்​பு​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

ட்ரோன் தொழில்​நுட்​பங்​கள், அவற்​றைப் பரிசோ​திக்​கும் மையங்​கள், ஆளில்லா ட்ரோன்​கள், தொலை உணரி (ரிமோட் சென்​சார்), வனங்​களில் காட்​டு​யிர்​களின் நடமாட்​டத்​தைக் கண்​காணிப்​ப​தற்​கான ட்ரோன் தொழில்​நுட்​பங்​கள், நவீன வரைபடங்​கள், திரும்​பப் பெறக்​கூடிய மற்​றும் மீண்​டும் பயன்​படுத்​தக்​கூடிய தன்​னிறை​வான விண்​கலத் தொழில்​நுட்​பம், இஸ்ரோ தொழில்​நுட்​பத்தை உட்​படுத்​திய பல்​வகைச் செயற்​கைக்​கோள் பரிசோதனை முயற்​சிகள், மின் வாக​னங்​கள், பலூன் ராக்​கெட், ரோபோட்​டிக் தொழில்​நுட்​பங்​கள் என பல்​வேறு அறி​வியல் துறை​கள் சார்ந்த 40 அரங்​கு​கள் இடம்​பெற்​றுள்​ளன.

இக்​கண்​காட்​சி​யில், உயர்​கல்​வித் துறைச் செயலர் பொ.சங்​கர், தொழில்​நுட்​பக் கல்​லூரி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்​யா, கல்​லூரிக் கல்வி ஆணை​யர் இ.சுந்​தர​வல்​லி, தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநர்​ கிராந்​தி குமார்​ பாடி உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

<div class="paragraphs"><p>‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் தொடக்க விழா குறித்த கண்காட்சியை சென்னை வர்த்தக மையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கோவி.செழியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். உடன் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்லூரி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர்.</p></div>
சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்களை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை: நீதிபதிகள் அதிருப்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in