சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்களை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை: நீதிபதிகள் அதிருப்தி

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்களை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை: நீதிபதிகள் அதிருப்தி
Updated on
1 min read

சென்னை: விதி​முறை​களை மீறி கட்​டப்படும் கட்டிடங்களை அதி​காரி​கள் முறை​யாக கண்​காணி்த்து நடவடிக்கை எடுப்​ப​தில்லை என உயர் நீதி​மன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்​துக்கு செல்​லும் வழியை மறித்து சாலை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென கடந்​தாண்டு மார்ச் மாதம் பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தரவை அதி​காரி​கள் அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி அவம​திப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசா​ரணைக்கு வந்​த​போது, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற போலீ​ஸார் உரிய பாது​காப்பு அளிக்​க​வில்லை என மாநக​ராட்சிதரப்​பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சம்​பந்​தப்​பட்ட காவல்​துறை அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்​தர​விட்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்​பன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தரப்​பில், சம்​பந்​தப்​பட்ட காவல் ஆய்​வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது, என தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிபதிகள் சென்​னை​யில் விதி​முறை​களை மீறி கட்​டப்​படும் கட்​டிடங்​களை மாநக​ராட்சி அதி​காரி​கள் முறை​யாக கண்​காணித்து நடவடிக்கை எடுப்​ப​தில்லை என்​றும், அரசு நிர்​வாக​மும் அதை கண்​டு​கொள்​வது இல்லை எனவும் அதிருப்தி தெரி​வித்​தனர்.

மேலும், விதி​முறை​களை மீறி கட்​டு​மானங்​கள் கட்​டப்​படு​கிறதா என அதி​காரி​கள் தொடர்ச்​சி​யாக கண்​காணித்​தால் மட்​டுமே அது​போன்ற வி​தி​மீறல்​கள் மீண்​டும் இருக்​காது என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்​கை முடித்​து வைத்​துள்​ளனர்​.

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்களை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை: நீதிபதிகள் அதிருப்தி
தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக ஐ.நா. அமைப்புடன் அரசு ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in