

சென்னை: வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், அவசரகாலப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், அவசரகாலப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும், மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்: விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் - என்.ஆனந்த், சென்னை, திருவண்ணாமலை - ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறை - வெங்கட ரமணன், திருவள்ளூர் - ரா.குமார், திருநெல்வேலி - மரியவில்சன், பெரம்பலூர் - ராஜ்மோகன், காஞ்சிபுரம் - க.தென்னரசு, திருப்பத்தூர் - ஆர்.வி.ரஞ்சித் குமார், செங்கல்பட்டு - த.சரத் குமார், கள்ளக்குறிச்சி - வன்னியரசு, ராணிப்பேட்டை - வ.காந்திராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, தருமபுரி, அரியலூர் - ப.ராஜ்குமார், நாகை - ஏ.எம்.ஷாஜகான், தஞ்சை - வினோத், திருச்சி - ரமேஷ், கரூர் - சி.விஜயலட்சுமி, நாமக்கல் - த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், திருப்பூர் - கே.ஜி.அருண்ராஜ், நீலகிரி - செ.கமலி, வேலூர் - ம.விஜய் பாலாஜி, ஈரோடு - கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை - வே.சம்பத்குமார், மதுரை, தேனி - நிர்மல்குமார், புதுக்கோட்டை - ஜா.முகமது பர்வேஸ், சிவகங்கை - டி.கே.பிரபு, கிருஷ்ணகிரி - எஸ்.கீர்த்தனா, விருதுநகர் - கு.ஜெகதீஸ்வரி, திருவாரூர் - பெ.விஸ்வநாதன், தூத்துக்குடி - நாத், ராமநாதபுரம் - பெ.மதன்ராஜா, சேலம் - விஜய் தமிழன் பார்த்திபன், கன்னியாகுமரி - செ.ராஜேஷ்குமார், தென்காசி - ராஜீவ், திண்டுக்கல் - க.விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.