குறைந்த தொகுதிகள்... கூடுதல் வெற்றி: விசிக, தேமுதிகவை முந்திய கம்யூனிஸ்ட்கள்

குறைந்த தொகுதிகள்... கூடுதல் வெற்றி: விசிக, தேமுதிகவை முந்திய கம்யூனிஸ்ட்கள்
Updated on
1 min read

சென்னை: குறைந்த தொகு​தி​களை பெற்​றிருந்​தா​லும், விசிக, தேமு​தி​கவை காட்​டிலும் கூடு​தலான தொகு​தி​களில் வெற்றி பெற்று கம்​யூனிஸ்ட் கட்​சிகள் தங்​களது செல்​வாக்கை நிரூபித்​துள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட குறைந்த தொகு​தி​களி​லும் அதிக வெற்​றியைப் பதிவு செய்து இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் அரசி​யல் அரங்​கில் கவனம் ஈர்த்​துள்​ளன.

திமுக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீட்​டின்​போது, இரு கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் இரட்டை இலக்க தொகு​தி​களைப் பெற தீவிர முயற்சி மேற்​கொண்​டன. எனினும், இழுபறிக்​குப் பின்​னர் இரு கட்​சிகளுக்​கும் தலா 5 தொகுதிகள் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டன. இதற்கு அப்​போதே அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்​நிலை​யில், தேர்​தல் முடிவு​கள் கம்​யூனிஸ்ட்​களின் செல்​வாக்கை உறு​திப்​படுத்​தி​யுள்​ளன. இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி போட்​டி​யிட்ட 5 இடங்​களில், தளி தொகு​தி​யில் ராமச்​சந்​திரனும், திருத்​துறைப்​பூண்​டி​யில் மாரி​முத்​து​வும் வெற்றி பெற்​றனர்.

அதே​போல், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் பத்​ம​நாபபுரம் தொகு​தி​யில் ஆர்​.செல்​ல​சாமி​யும், கீழ்​வேளூரில் லதா​வும் வெற்றி வாகை சூடி​யுள்​ளனர். இதன்​மூலம் இரு கட்​சிகளும் தலா 2 இடங்​களில் வெற்​றியை பதிவு செய்​துள்​ளன.

அதே​நேரம் திமுக கூட்​ட​ணி​யில் 8 தொகு​தி​களை பெற்ற விசிக, காட்​டுமன்​னார் கோயில் (ஜோ​தி​ மணி) மற்​றும் திண்​டிவனம் (வன்​னியரசு) ஆகிய 2 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளது.

10 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட தேமு​தி​கவோ, பிரேமலதா விஜய​காந்த் (விரு​த்தாசலம்) பெற்ற வெற்​றி​யின் மூலம் ஒரே ஒரு இடத்​துடன் திருப்தி அடைய வேண்​டிய சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

அந்​த வகை​யில், குறைந்த தொகு​தி​களில் போட்​டி​யிட்​டாலும், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் கூடு​தல் தொகு​தி​களில் வெற்​றியை பதிவு செய்​து, தங்​களது செல்​வாக்கை நிரூபித்​துள்​ளன.

குறைந்த தொகுதிகள்... கூடுதல் வெற்றி: விசிக, தேமுதிகவை முந்திய கம்யூனிஸ்ட்கள்
கேரளாவைக் கைப்பற்றியது காங்கிரஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in