உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சர் விஸ்வநாதன் ஆலோசனை

உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சர் விஸ்வநாதன் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை தொடர்​பாக அரசு உயர் அதி​காரி​களு​டன் உயர்​கல்​வித் துறை அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

சட்​டப்​பேர​வை​யில் பட்​ஜெட் மற்​றும் வேளாண் பட்​ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து துறை​கள் வாரி​யான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்க உள்​ளது.

இந்​நிலை​யில், உயர்​கல்​வித்​துறை மானியக் கோரிக்கை தொடர்​பான ஆய்வு கூட்​டம் உயர்​கல்வி அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடந்தது.

இக்​கூட்​டத்​தில் உயர்​கல்​வித் துறை செயலர் தீரஜ் குமார், ரஷ்மி சித்​தார்த் ஜகடே, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் பி. ரத்​தின​சாமி, கல்​லூரிக் கல்வி ஆணை​யர் பா. பொன்​னை​யா, தமிழ்​நாடு ஆவண காப்​பகம் மற்​றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணை​யர் எஸ்​‌மலர்​விழி, அறி​வியல் நகர துணைத் தலை​வர் எஸ்​.​வி​சாகன், தமிழ்​நாடு மாநில அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கவுன்​சில் உறுப்​பினர்​ - செயலர் எஸ்​.​வின்​சென்ட் மற்​றும் பல்​கலைக்​கழகங்​களின் பதி​வாளர்​கள் அரசு உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்.

உயர்​கல்​வித்​துறை சார்​பில் வெளி​யிடப்​படும் அறி​விப்​பு​கள், பல்​கலைக்​கழகங்​களில் ஒருங்​கிணைந்த பாடத்​திட்​டத்தை அறி​முகப்​படுத்​துவது, ஆசிரியர் மற்​றும் ஆசிரியர் அல்​லாத காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவது. துணைவேந்​தர்​கள் நியமனம் உள்​ளிட்​டவை தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்.

உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சர் விஸ்வநாதன் ஆலோசனை
வார கடைசி நாளையொட்டி 1,805 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in