

சென்னை: வார இறுதி நாளையொட்டி 1,805 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள் நலன் கருதி போக்குவரத்துத் துறை மூலமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 430 பேருந்துகளும், நாளை 465 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றைய தினம் 110 பேருந்துகளும், நாளை 110 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தி
லிருந்து இன்று, நாளை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அன்றைய தினம் 410 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த வார இறுதியில் சொந்த ஊர் செல்ல இன்றைய தினம் 8,570 பயணிகளும், நாளை 3,158 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 8,953 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்கிறோம்.