மேகேதாட்டு, பெரியாறு அணைகள் விவகாரம்: கர்நாடக, கேரள முதல்வர்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம்

மேலூர் நிகழ்ச்சியில் தவெக தொண்டர்களுடன் விஜய் பாடலுக்கு நடனமாடியதால் சர்ச்சை
மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தவெக தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்.

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தவெக தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்.

Updated on
1 min read

மதுரை: மேகே​தாட்டு அணை கட்​டும் விவ​காரத்​தில் கர்​நாடக முதல்​வருக்​கும், பெரி​யாறு அணை விவ​காரத்​தில் கேரள முதல்​வருக்​கும் கண்​டனம் தெரி​விப்​ப​தாக உயர் கல்​வித்​துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன் கூறி​னார்.

தமிழக முதல்​வர் விஜய், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்​த​நாளை​யொட்டி தவெக, காங்​கிரஸ் சார்​பில் மதுரை மேலூரில் பெண்​கள் பாது​காப்பு விழிப்​புணர்வு மாரத்​தான் போட்டி நேற்று நடை​பெற்​றது. இதனை தொடங்கி வைத்து பேசிய அமைச்​சர் விஸ்​வ​நாதன், ‘பு​திய வரலாறு படைத்து ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள மு.க.ஸ்​டா​லினின் ஆட்சி நல்​லாட்​சி​யாக நடை​பெற வாழ்த்​துகள் என்​றார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தவெக, காங்​கிரஸ் நிர்​வாகி​கள் தவறை சுட்​டிக்காட்​டியதைத் தொடர்ந்து பின்​னர் முதல்​வர் பெயரை விஜய் எனத் திருத்திச் சொன்​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை​யைக் கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவக்​கு​மாரை கண்​டிக்​கிறோம். கேரளம், புது​வை, தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநில அரசுகளு​டன் கலந்து பேசிய பிறகே கர்​நாடக அரசு எந்த முடி​வும் எடுக்க வேண்​டும். அதே​போல், முல்லை பெரி​யாறு அணை​யின் நீர்​மட்​டத்தை உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வின்​படி 152 அடி வரை உயர்த்த வேண்​டும்.

புதிய அணை கட்​டு​வது ஏற்​புடையது அல்ல. கேரள முதல்​வரின் கருத்​துக்கு கண்​டனத்​தைத் தெரி​வித்​துக்​கொள்​கிறேன். திமுக கூட்​ட​ணியி​லிருந்து இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்சி வில​கி​யுள்​ளது எங்​களுக்கு கூடு​தல் நம்​பிக்​கையை தந்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

விஜய் பாடலுக்கு நடனம்: முன்​ன​தாக விஜய் நடித்த திரைப்​படப் பாடலான ‘வாடி.. வாடி.. வாடி.. கைப்​ப​டாத சிடி’ எனும் பாடலுக்கு தவெக​வினர் நடன​மாடினர். இதைப் பார்த்த அமைச்​சர் விஸ்​வ​நாதனும் மேடை​யிலேயே அவர்​களு​டன் சேர்ந்து உற்​சாக​மாக நடன​மாடி​னார். அமைச்​சரே தவெக​வினருடன் சேர்ந்து குத்​தாட்​டம் ஆடியது சர்ச்​சையை ஏற்​படுத்​தி ​உள்​ளது.

<div class="paragraphs"><p>மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தவெக தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்.</p></div>
நீட் எழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in