ஆட்டோ மீட்டர் கட்டணம் விரைவில் திருத்தம்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்

ஆட்டோ மீட்டர் கட்டணம் விரைவில் திருத்தம்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்
Updated on
1 min read

சென்னை: ‘ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணத்தை திருத்​தி​யமைக்க விரை​வில் நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் தெரி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று போக்​கு​வரத்​துத் துறை உள்​ளிட்ட துறை​களின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தில் பேசிய மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ லதா (கீழ்​வேளூர்), “தமிழகத்​தில் தற்​போதைய மக்​கள் தொகைக்கு ஏற்ப 30 ஆயிரம் பேருந்​துகள் இயக்க வேண்​டும், ஆனால் 20,500 பேருந்​துகள் மட்​டுமே இயக்​கப்​படு​கின்​றன.

மக்​கள் தொகைக்கு ஏற்ப பேருந்​துகளை அதி​கரிக்க வேண்​டும். ஓய்​வூ​தி​யர்​களுக்கு ஓய்​வு​பெறும் நாளி​லேயே பணபலன்​கள் கொடுக்க வேண்​டும். தேர்​தல் வாக்​குறு​திப்​படி மகளிருக்கு மாநிலம் முழு​வதும் கட்​ட​ணமில்லா பேருந்து பயணத்தை செயல்​படுத்த வேண்​டும்.

தனி​யார்​ம​யத்தை முற்​றி​லு​மாகக் கைவிட வேண்​டும். தனி​யார் பேருந்​துகள் கட்​ட​ணத்தை தன்​னிச்​சை​யாக உயர்த்​தி​யுள்​ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

1977-ம் ஆண்​டுக்கு பின் ஆட்​டோ, டாக்ஸி மீட்​டர் கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட​வில்​லை, அதை அரசு நிர்​ண​யம் செய்ய வேண்​டும். எம்​எல்ஏ தொகுதி மேம்​பாட்டு நிதியை ரூ.5 கோடி​யாக உயர்த்த வேண்​டும்.

தலைமை செயல​கத்​தில் மனு கொடுக்க வரும் பொது​மக்​கள் மீதான போலீ​ஸாரின் கெடு​பிடிகளைத் தளர்த்​தவேண்​டும்” என்​றார். இதற்கு பதிலளித்து போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் பேசும்​போது, “உறுப்​பினரின் கோரிக்​கைகள் குறித்து அதி​காரி​களு​டன் ஆலோ​சித்​து, சாத்​தி​ய​மானவை நிறைவேற்​றப்​படும்.

ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணத்​தைப் பொறுத்​தவரை, ஆட்டோ ஓட்​டுநர்​கள், உரிமை​யாளர்​கள், தொழிற்​சங்​கங்​கள், பொது​மக்​களு​டன் எனது தலை​மை​யில் கடந்த ஜூலை 9-ம் தேதி ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது.

தொடர்ந்து ஆக.5-ம் தேதி மீட்​டர் பொருத்​த​வும், கட்​ட​ணம் நிர்​ண​யிக்​க​வும் குழு அமைக்​கப்​பட்​டு, அக்​குழு கடந்த 21-ம் தேதி முதற்​கட்ட பரிந்​துரைகளை அரசுக்கு வழங்​கி​யுள்​ளது.

அதன் அடிப்​படை​யில் ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணத்தை திருத்​தி​யமைக்​க​வும், மீட்​டர்​கள் பொருத்​த​வும் விரை​வில் நடவடிக்கை எடுக்​கப்​படும்”

என்​றார்.

தொடர்ந்து பேசிய அமைச்​சர் ராஜ்மோகன், “தலைமைச் செயல​கத்​துக்கு ஒரே நேரத்​தில் அதிக மக்​கள் வரு​வ​தால் சில சலசலப்​பு​கள் ஏற்​படலாம். அதை சரி செய்ய பொதுப்​பணித்​துறை அமைச்​சர் அறி​விப்​பு​களை வெளி​யிட்​டுள்​ளார்.

ஆரம்​ப நாள் முதல் கடைசி நாள் வரை பேரவை நிகழ்​வு​களை நேரலை செய்​துள்ள பேர​வைத் தலை​வரை ‘நேரலை நாயகன்’ என்றே அழைக்​கலாம். செவித்​திறன் குறை​பாடு உடையோ​ருக்​கான சைகை மொழி வசதி​யை​யும்​ ஏற்​படுத்​த வேண்​டும்” என்​றார்​.

ஆட்டோ மீட்டர் கட்டணம் விரைவில் திருத்தம்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்
ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் முதல்வர் விஜய்: திமுக கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in