ஆயக்குடி சமூக நீதி பள்ளி மாணவிகளுக்கு விரைவில் சொந்த விடுதி கட்டிடம்: அமைச்சர் வன்னி அரசு உறுதி

ஆயக்குடி சமூக நீதி பள்ளி மாணவிகளுக்கு விரைவில் சொந்த விடுதி கட்டிடம்: அமைச்சர் வன்னி அரசு உறுதி
Updated on
1 min read

சென்னை: பழநி தொகுதி ஆயக்குடி சமூக நீதி பள்ளி மாணவிகளுக்கு விரைவில் சொந்த விடுதி கட்டிடம் கட்டித்தரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ கு.ரவிமனோகரன், “பழநி தொகுதியில் ஆயக்குடி பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மாணவியர் விடுதி புதிதாக கட்டித்தரப்படுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அளித்த பதில்: திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி சமூகநீதி பள்ளி மாணவியர் விடுதிக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மாணவியர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த விடுதி பழுதடைந்ததை தொடர்ந்து, மாணவிகளின் கல்வி நலன் கருதி, சிவகிரிப்பட்டி கிராமம், திருவள்ளுவர் நகரில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் முதல் அனைத்து வசதிகளுடன் கூடிய வாடகை கட்டிடத்தில் 30 மாணவியருடன் விடுதி செயல்பட்டு வருகிறது.

ஆயக்குடி சமூகநீதி பள்ளி மாணவியர் விடுதிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் விடுதிக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ஆயக்குடி சமூக நீதி பள்ளி மாணவிகளுக்கு விரைவில் சொந்த விடுதி கட்டிடம்: அமைச்சர் வன்னி அரசு உறுதி
“யுபிஐ-ன் பிரம்மாண்டமும் பயனும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது” - பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in