தவெக அரசில் பாமக இடம்பெற்றால் விசிகவின் நிலை என்ன? - அமைச்சர் வன்னி அரசு பதில்

தவெக அரசில் பாமக இடம்பெற்றால் விசிகவின் நிலை என்ன? - அமைச்சர் வன்னி அரசு பதில்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கு வந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேற்று கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறையாக மாற்றியது தொடர்பாக விசிகவில் இருவேறு கருத்துகள் உள்ள நிலையில், ‘சமூக நீதித்துறையாக மாற்று வதனால் என்ன சாதகம்?' என்ற கேள்விக்கு, இங்கு நான் அரசியல் பேச விரும்பவில்லை. இது தொடர்பாக எங்கள் கட்சித் தலைவர் பேசுவார் என பதிலளித்தார்.

தொடர்ந்து மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “அவர் முதல்வராக இருந்த போது என்ன நிலை எடுக்கப் பட்டதோ, அதே நிலை தான் திமுக ஆட்சியிலும் தொடர்ந்தது.

தற்போது தவெக அரசிலும் அதே நிலை தான் தொடர்கிறது. இதில் மாநில உரிமையை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, அனைவரும் ஆதரித்த னர். எனவே சட்டப்பேரவையில் ஒரு மாதிரியாகவும் பொது வெளியில் வேறு மாதிரியாகவும் பேசுவது மரபல்ல” என்றார்.

தவெக அரசில் பாமக இடம் பெற்றால் விசிக நிலை என்ன என்ற கேள்விக்கு, “இதுகுறித்து பாமக தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். முதல்வரை பொறுத்தவரை எங்களுக்கு சுதந்திரம் அளித்திருக்கிறார். நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்றார்.

தவெக அரசில் பாமக இடம்பெற்றால் விசிகவின் நிலை என்ன? - அமைச்சர் வன்னி அரசு பதில்
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in