“தவெகவை எதிர்க்க சீமானை திமுக ஆதரிப்பது எந்த விதத்தில் சரி?” - அமைச்சர் வன்னி அரசு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on: 
1 min read

திண்டிவனம்: “தவெகவை எதிர்க்க, ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட சீமானை திமுக ஆதரிப்பது எந்த விதத்தில் சரி?” என்று  சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டிவனத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சிறுமி காணாமல் போன விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். தகவல் கொடுப்பவருக்கு ரூ. 2 லட்சம் என காவல்துறை அறிவித்துள்ளது. விரைந்து நல்லபடியாக சிறுமி கண்டுபிடிக்கப்படுவார்.

கோவையில் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்டதை யாரும் ஏற்க முடியாது. விசிக தலைவர் திருமாவளவனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதிகாரிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் தீர்வு கிடைக்கும். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி கற்கும் பள்ளியில் சாதிய பாகுபாடு என்பது மோசமான செயலாகும்.

திமுக திசை மாற்றும் வேலையை செய்கிறது. பிராமண கடப்பாரை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன், திருட்டு திமுக, கருணாநிதியின் பேனா சிலையை உடைப்பேன் என்று சொன்ன நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுக கண்டிக்கவில்லை. திமுக செய்வது மலிவான அரசியல். தவெகவை எதிர்க்க, ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட சீமானை திமுக ஆதரிப்பது எந்த விதத்தில் சரி? இதற்கு பதில் சொல்லாமல் ஆ.ராசா போன்றவர்கள் மூலம் எங்களை திட்டுவது திமுகவின் செயல்பாடு என்ன என்பதை நான் மக்கள் மத்தியில் விட்டுவிடுகிறேன்.

போதைப் பொருள் கடத்தியவர் தவெகவை சேர்ந்தவர் என்பதற்காக விடவில்லை, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசின் செயல்பாடு போதையற்ற தமிழ்நாடு என்பதை நோக்கி செல்கிறோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மக்களை சந்திக்கலாம். இறுதியில் மக்கள் தான் முடிவு செய்வார்கள். நடிகர்கள் வரக்கூடாது என கூற முடியாது. அவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கானவையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எவ்வளவு பெரிய நடிகர்கள், வீராதி வீரர்கள் வந்தாலும் மதச்சார்பற்ற தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டால் அது எடுபடாது. ஏழைகளுக்கான அரசாக தவெக அரசு இல்லை என டி.ஆர்.பி. ராஜா கூறுவது நகைச்சுவையாக உள்ளது. எங்களைப் போன்ற ஏழைகள் தான் இன்றைக்கு அமைச்சராக உள்ளோம். அவரைப் போன்ற வசதி படைத்தவர்கள், மிட்டா மிராசுகள் நாங்கள் இல்லை” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
“இரு அமைச்சர்களுடன் காங்கிரஸ் திருப்தி அடையவில்லை” - அமைச்சர் ராஜேஷ்குமார் திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in