“இரு அமைச்சர்களுடன் காங்கிரஸ் திருப்தி அடையவில்லை” - அமைச்சர் ராஜேஷ்குமார் திட்டவட்டம்

“இரு அமைச்சர்களுடன் காங்கிரஸ் திருப்தி அடையவில்லை” - அமைச்சர் ராஜேஷ்குமார் திட்டவட்டம்
Updated on: 
1 min read

நெல்லை: “தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டதற்காக காங்கிரஸ் கட்சி திருப்தி அடைந்துவிடவில்லை. காமராஜர் ஆட்சி அமைப்பது எங்களது கனவு. அதற்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்” என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களது கனவு. கட்சியை வளர்த்து வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிகளுக்கும், ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தவெக - காங்கிரஸ் இடையே எந்தவித கருத்துமோதலும் இல்லை. லஞ்சம், ஊழல் இல்லாத அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் எங்களது பணி. சட்டம் ஒழுங்கு சரியில்லை எனப் பொதுவாக ஓர் அரசின் மீது குற்றம்சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல.

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் கிடையாது என முதல்வர் தெரிவித்துள்ளார். மகாபலிபுரத்தை ரூ.200 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“இரு அமைச்சர்களுடன் காங்கிரஸ் திருப்தி அடையவில்லை” - அமைச்சர் ராஜேஷ்குமார் திட்டவட்டம்
“குழந்தைகளின் பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்” - வானதி சீனிவாசன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in