தாம்பரத்தில் அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையம்: அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

தாம்பரத்தில் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய்  நல்ஆதரவு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். உடன் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் செயலாளர் செந்தில்குமார், செங்கை ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர். (அடுத்தபடம்) அரசு புற்றுநோய் நல்ஆதரவு மையம்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

தாம்பரத்தில் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் நல்ஆதரவு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். உடன் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் செயலாளர் செந்தில்குமார், செங்கை ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர். (அடுத்தபடம்) அரசு புற்றுநோய் நல்ஆதரவு மையம்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

Updated on
2 min read

தாம்பரம்: ரூ.30.16 கோடி மதிப்​பீட்​டில் தாம்​பரத்​தில் கட்​டப்​பட்ட அரசு புற்றுநோய் நல்​லாதரவு மையத்தை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று திறந்​து​வைத்​தார். கரோனா காலத்​தில் விமானம் மூலம் வெளி​நாடு​களில் இருந்து வருபவர்​களுக்கு தொற்று இருப்​பது கண்​டறியப்​பட்​டால் அவர்​களை தனிமைப்​படுத்தி சிகிச்சை அளிக்​கும் வகை​யில் தாம்​பரம் சானடோரி​யத்​தில் தேசிய சித்த மருத்​து​வ​மனையை ஒட்டி 180 படுக்கை வசதி​களு​டன் கூடிய தனிமைப்​படுத்​தப்​பட்ட மருத்​து​வ​மனை கட்​டப்​பட்​டது.

அதன்​பின் இந்த மருத்​து​வ​மனை பயன்​படுத்​தப்​ப​டா​மல் இருந்​தது. இதையடுத்து, அந்த கட்​டிடத்தை ரூ.30.16 கோடி செல​வில் மேம்​படுத்​தி, புற்றுநோய் பாதிக்​கப்​பட்டு இறுதி கட்​டத்​தில் உள்ள நோ​யாளி​களுக்​கான ‘நல் ஆதர​வு’ சிகிச்சை மைய​மாக மாற்​றப்​பட்​டது.

இம்​மருத்​து​வ​மனையை, அமைச்​சர் சுப்​பிரமணி​யன் நேற்று திறந்து வைத்​தார். 180 படுக்கை வசதி கொண்ட இதில் அதிதீ​விர சிகிச்சை பிரி​வில் 16, பொது சிகிச்சை பிரி​வில் 134, கட்​ட​ணம் பிரி​வில் 30 படுக்கை வசதி​கள் உள்​ளன.

இம்​மருத்​து​வ​மனை, சென்னை ராஜிவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை​யின் கீழ் இயங்​கும். அங்கு பணிபுரி​யும் மருத்​து​வர்​கள், மூன்று ஷிப்​டு​களில் இங்கு பணிபுரிவர். இம்​மருத்​து​வ​மனைக்கு தமிழகம் மட்​டுமின்றி எந்த மாநிலத்​தில் இருந்​தும் வரலாம்.

அப்​போது, அமைச்​சர் சுப்​பிரமணி​யன் பேசி​ய​தாவது: நாட்​டிலேயே இரண்​டாவது மிகப்​பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம், காஞ்​சிபுரத்​தில் ரூ.325 கோடி செல​வில் கட்​டப்​பட்டு வரு​கிறது. இது விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரவுள்​ளது. கரோனா காலத்​தில் தொற்று நோய் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை தனிமைப்​படுத்த தாம்​பரத்​தில் இந்த மருத்​து​வ​மனை கட்​டப்​பட்​டது.

இந்த கட்​டிடத்தை பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என்ற நோக்​கத்​தில் புற்றுநோய் பாதிக்​கப்​பட்டு இறுதி கட்​டத்​தில் உள்ள நோ​யாளி​களுக்கு சிகிச்சை அளிக்க வசதி​யாக நல் ஆதரவு மைய​மாக தொடங்​கப்​பட்​டுள்​ளது. புற்றுநோய் பாதிக்​கப்​பட்டு இறுதி கட்​டத்​தில் இருப்​பவர்​களை மகிழ்ச்​சி​யான மனநிலை​யில் வைத்​திருக்​கும் அனைத்து வகை​யான சிகிச்​சைகளும் அளிக்​கப்​படும்.

இது​போன்ற ஒரு மருத்​து​வ​மனையை திறப்​பது என்​பது நாட்​டிலேயே (அரசு மருத்​து​வ​மனை​களை பொறுத்​தவரை) இதுவே முதல் முறை. ஸ்டான்​லி, கீழ்ப்​பாக்​கம், ராயப்​பேட்டை மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறும் புற்றுநோய் பாதிக்​கப்​பட்டு இறுதி கட்​டத்​தில் இருக்​கும் நோ​யாளி​கள் இங்கு வந்து தங்​கலாம்.

இங்கு தேவை​யான வலி நிவாரண மருந்​து, உணவு, மகிழ்ச்​சி​யான மனநிலையை ஏற்​படுத்​தக் கூடிய கவுன்​சிலிங், தியான மையம், நுால​கம் ஆகியவை அமைக்​கப்​படும்.

இதைத்த​விர, டிஜிட்​டல் எக்​ஸ்​ரே, சி.டி.ஸ்​கேன், அறுவை சிகிச்சை அரங்​கம் போன்ற வசதி​களும் ஏற்​படுத்​தப்​படும். இதேபோல், சமீபத்​தில் திறக்​கப்​பட்ட மாவட்ட மருத்​து​வ​மனையை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்​து​வ​மனை​யாக மாற்​று​வதற்​கான எம்​.ஆர்​.ஐ. ஸ்கேன் உள்​ளிட்ட வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் எம்​எல்​ஏக்​கள் எஸ்​.ஆர்​.​ராஜா, இ.கருணாநி​தி, மருத்​து​வம் மற்​றும் மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை அரசு கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் ப.செந்​தில்​கு​மார், செங்​கல்​பட்டு ஆட்​சி​யர் சினே​கா, தாம்​பரம் மாநக​ராட்சி ஆணை​யர் சீ.​பாலசந்​தர், மருத்​து​வக்​ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி இராஜகு​மாரி, பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத் துறை இயக்​குநர் சோமசுந்​தரம், சென்னை மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் சாந்​தா​ராமன், பொதுப்​பணித் ​துறை தலை​மைப் பொறி​யாளர் மணி​கண்​டன் மற்​றும் மருத்​து​வப்​ பேராசிரியர்​கள்​, உயர்​ அலு​வலர்​கள்​ கலந்​து கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>தாம்பரத்தில் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய்  நல்ஆதரவு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். உடன் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் செயலாளர் செந்தில்குமார், செங்கை ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர். (அடுத்தபடம்) அரசு புற்றுநோய் நல்ஆதரவு மையம்.படங்கள்: எம்.முத்துகணேஷ்</p></div>
17-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி: காஞ்சியில் ஆளுநர் நாளை தொடங்கி வைக்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in