17-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி: காஞ்சியில் ஆளுநர் நாளை தொடங்கி வைக்கிறார்

17-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி: காஞ்சியில் ஆளுநர் நாளை தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

சென்னை: மை பாரத்​தின் தமிழகம், புதுச்​சேரி மாநில இயக்​குநர் செந்​தில்​கு​மார் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மத்​திய அரசின் இளைஞர் நலன், விளை​யாட்டு துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் மை பாரத் சார்​பில் 17-வது பழங்​குடி​யினர் இளைஞர் பரி​மாற்ற நிகழ்ச்சி பிப்​.19 முதல் 25-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

காஞ்​சி மாவட்​டம் ஏனத்​தூரில் உள்ள  சங்​கரா கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​யில் இந்​நிகழ்ச்​சியை பிப்​.20-ம் தேதி (நாளை) ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க உள்​ளார்.

இந்த நிகழ்ச்​சிகளில் பங்கேற்கும் 200 இளைஞர்​களுக்​கு, கலாச்​சார நிகழ்​வு​கள், கல்​விச் சுற்​றுலாக்​கள், தலை​வர்​களு​ட​னான கலந்​துரை​யாடல்​கள் மூலம் ஊக்​கம், தன்​னம்​பிக்கை ஏற்​படும்.

பழங்குடியின இளைஞர்​கள் மத்​தி​யில் இந்​நிகழ்வு பெரும் மாற்​றத்தை ஏற்​படுத்​தும். இது தேசிய ஒரு​மைப்​பாடு, இளைஞர்​களை உள்​ளடக்​கிய வளர்ச்​சியை மேம்​படுத்​தும் ஒரு தேசிய முன்​னோடி திட்​ட​மாகும் என்றார்.

17-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி: காஞ்சியில் ஆளுநர் நாளை தொடங்கி வைக்கிறார்
துணை சுகாதார நிலையங்கள் 9,355 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in