‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் ராம.சுந்தரபாண்டியன் ஆகியோர்.

சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் ராம.சுந்தரபாண்டியன் ஆகியோர்.

Updated on
1 min read

சென்னை: சென்னை ஒன் செயலி வாயி​லாக மின்​னணு மாதாந்​திர பயண அட்டை பெறும் வசதியை அமைச்​சர் சிவசங்​கர் தொடங்கி வைத்​தார்.

மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் மற்​றும் கும்டா இணைந்து சென்னை ஒன் செயலி வாயி​லாக ரூ.1,000 (கோல்​டன் டிக்​கெட்) மற்​றும் ரூ.2,000 (டைமண்ட் டிக்​கெட்) மின்​னணு மாதாந்​திர பயண அட்டை பெறும் வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

சென்னை பல்​ல​வன் சாலை​யில் உள்ள மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் இந்த வசதியை பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் அறி​முகம் செய்து வைத்​தார்.

தற்​போது, மாநகர் போக்​கு​வரத்​துக் கழக முக்​கிய பேருந்து நிலை​யங்​களில் மாதாந்​திர பயணச்​சீட்டு மையங்​கள் வாயி​லாக வழங்​கப்​பட்டு வரும் விருப்​பம்​போல் பயணம் செய்​யும் ரூ.1000 மற்​றும் ரூ.2000 மதிப்​பிலான பயண அட்​டைகள், சென்னை ஒன் செயலி வாயி​லாக எங்​கும் – எப்​போதும் கைபேசி​யில் எளி​தாக பெறக்​கூடிய மின்​னணு பயண அட்​டைகளாக மாற்​றப்​பட்​டுள்​ளன.

சென்னை ஒன் செயலி வாயி​லாக பெறப்​படும் இந்த மின்​னணு பயண அட்டை வாங்​கிய நாளி​லிருந்​து, தொடர்ந்து 30 நாட்​களுக்கு செல்​லுபடி​யாகும். மேலும், இது முழுக்க முழுக்க பணமில்லா பரிவர்த்​தனை முறை​யில் இயங்​கு​வ​தால் யுபிஐ அல்​லது டெபிட், கிரெடிட் கார்​டு​கள் மூலம் உடனடி​யாக கட்​ட​ணம் செலுத்​தி, பயண அட்டை பெறும் வசதி உள்​ளது என அதி​காரி​கள் கூறினர்.

இதை தொடர்ந்து நாட்​டிலேயே சிறந்த பொதுப் போக்​கு​வரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற தேசிய விருது பெற்​றதற்​காக மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அனைத்து பணி​யாளர்​களுக்​கும் அமைச்​சர் பாராட்​டுச் சான்​றிதழும், பதக்​க​மும் வழங்கி கவுர​வித்​தார்.

இந்த​நிகழ்ச்​சி​யில், மாநகர் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் த.பிரபுசங்​கர், சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து அதி​கார அமைப்பு (கும்​டா) உறுப்​பினர் செயலர் ஐ.ஜெயக்​கு​மார், மாநகர் போக்​கு​வரத்​துக் கழக இணை மேலாண் இயக்​குநர் ராம.சுந்​தர​பாண்​டியன், உயர் அலு​வலர்​கள்​ மற்​றும்​ தொழிற்​சங்​க பிர​தி​நி​திகள் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் ராம.சுந்தரபாண்டியன் ஆகியோர்.</p></div>
குழந்தைகள் நலன் பேணும் நிறுவனங்களுக்கு சேவை விருதுகளை வழங்கினார் முதல்வர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in