பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

Updated on: 
1 min read

சென்னை: “வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, மக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் வானிலை ஆய்வு மையம், காவல்துறை, கடற்படை, பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடந்தது.

பின்னர், இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, மக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், அனைத்து துறைகளின் சார்பில் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பு நடந்த சம்பவங்களைப் பொறுத்து தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

பெரும் மழையால் மின்சாரப் பிரச்சினை வந்தால், ஆங்காங்கே ஜெனரேட்டர்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வரும்போது, அப்பகுதி மக்களை பாதுகாப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை வரும்போது, மக்களுக்கு இடர்பாடுகள் இல்லாமல், பொருட்சேதம் இல்லாமல், சாலைகளில் தண்ணீர் தேங்காமல் மின்சாரம் தடையில்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு உயர் அதிகாரிகள், பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூப்பர் எல் நினோ மூலம் நமக்கு கூடுதல் எச்சரிக்கை கொடுப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசு தான் முடிவு செய்யும். நாங்கள் அதற்கான கோரிக்கைகளை விடுப்போம். நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் செங்கோட்டையன்</p></div>
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in