திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்
Updated on
1 min read

சென்னை: திருப்பரங்குன்றம் விவ​காரத்​தில் 2014-ம் ஆண்டு தீர்ப்​பின்​படி நடந்து கொண்​டிருக்​கிறோம் என்று அமைச்​சர் ரகுபதி தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கார்த்​திகை தீபம் என்​பது இந்​தி​யா​வில் உள்ள இந்​துக்​களின் பண்​டிகை அல்ல. அது தமிழ்க் கடவுள் முரு​க​னுக்​காக கொண்​டாடப்​படும் தமிழரின் பண்​டிகை.

இதில் இந்​துத்​து​வாவுக்கு எந்த வேலை​யும் இல்​லை. ஆனால் கார்த்​திகை தீபத்​தையொட்டி திடீரென ஒரு பிரச்​சினையை தற்​போது ஏற்​படுத்​தி​யிருக்​கிறார்​கள். ஆனால் அவர்​கள் ஒன்றை மறந்​து​விட்​டார்​கள்.

கடந்த 2014-ம் ஆண்டு நீதிப​தி​கள் பவானி சுப்​பு​ராஜன், கல்​யாண சுந்​தரம் ஆகியோர், “எந்த இடத்​தில் வழக்​க​மாக கார்த்​திகை தீபத்தை ஏற்​றிக்​கொண்டு இருக்​கிறோமோ அதே இடத்​தில்​தான் கார்த்​திகை தீபத்தை ஏற்ற வேண்​டும்” என தீர்ப்பு வழங்​கினர்.

இதைப்​பற்றி தெரி​யாதவர்​கள், புதி​தாக ஒன்றை கண்​டு​பிடித்​ததை​போல நீதி​மன்​றத்தை அணுகி, கார்த்​திகை தீபத்​தையொட்டி ஒரு இடத்தை குறிப்​பிட்டு விளக்​கேற்ற அனு​மதி கேட்​டுள்​ளனர். அதற்​கும் அந்த நீதிபதி அனு​மதி வழங்கி தீர்ப்​பளித்​துள்​ளார்.

2014-ல் இரண்டு நீதிப​தி​கள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்​பின் மீது மேல்​முறை​யீடு இல்​லாமல், தனி நீதிப​தியை வைத்து ஒரு தீர்ப்பை வாங்​கிக்​கொண்​டு, அதை நிறைவேற்ற வேண்​டும் என்று கேட்​டால் எப்​படி நிறைவேற்ற அனு​ம​திக்க முடி​யும்? அப்​படி அனு​ம​தித்​தால் தமிழக அரசின் மீது என்ன குற்​றச்​சாட்டு வரும் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். எனவே, 2014 தீர்ப்​பின்​படி நாங்கள் நடந்து கொண்​டிருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்
பிரயாஸ் திட்டத்தின்கீழ் ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிய இபிஎஃப்ஓ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in