பிரயாஸ் திட்டத்தின்கீழ் ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிய இபிஎஃப்ஓ

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த  நவம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டது. ஆணைகளை பெற்றவர்களுடன் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 (ஓய்வூதியம்) நீரஜ் சிங் மற்றும் அதிகாரிகள்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த நவம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டது. ஆணைகளை பெற்றவர்களுடன் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 (ஓய்வூதியம்) நீரஜ் சிங் மற்றும் அதிகாரிகள்.

Updated on
1 min read

சென்னை: ‘பிர​யாஸ்’ திட்​டத்​தின் கீழ், ஓய்வு பெறும் நாளி​லேயே ஊழியர்​களுக்​கான ஓய்வூதியம் பெறு​வதற்​கான ஆணை, தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் சார்​பில் வழங்​கப்​பட்​டது.

மத்​திய அரசு ‘பிர​யாஸ்’ என்ற திட்​டத்தை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்​கள், ஓய்​வு​பெறும் நாளி​லேயே அவர்​களுக்கு ஓய்வூதியம் வழங்​கப்​படும்.

அதன்​படி, நவம்​பர் மாதத்​தில் பணி மூப்பு காரண​மாக, ஓய்வு பெற்ற ஊழியர்​களுக்கு ஓய்​வூ​திய வழங்​கல் ஆணை​களை தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனத்​தின் சென்னை மண்​டலம் வழங்கி சிறப்​பித்​தது.

சென்னை ராயப்​பேட்டை மண்டல அலு​வலக வளாகத்​தில், நேற்​று​முன்​தினம் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், ஓய்​வு​பெற்ற ஊழியர்​களுக்கு ஆணை​களை மண்டல வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேபி பிர​சாத் பட்​டாச்​சார்யா வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில், மண்டல வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் (ஓய்வூதியம்) நீரஜ் சிங், உதவி ஆணை​யர் பிபின்​கு​மார், கணக்கு அலு​வலர் (ஓய்வூதியம்) ஏ.பிர​காஷ், மேற்​பார்​வை​யாளர் கே.ஆனந்​தி, முதன்மை அதி​காரி சு.செந்​தில்​வேல் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்​.

<div class="paragraphs"><p>தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த  நவம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டது. ஆணைகளை பெற்றவர்களுடன் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 (ஓய்வூதியம்) நீரஜ் சிங் மற்றும் அதிகாரிகள்.</p></div>
டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in