திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன கட்டணங்கள் உயர்வா? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன கட்டணங்கள் உயர்வா? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: திருச்செந்தூர் முரு​கன் கோயி​லில் தரிசன கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ள​தா? என்​பது குறித்து அமைச்​சர் ரமேஷ் விளக்​கம் அளித்​துள்​ளார். சென்னை கொடுங்​கையூர் பவானி​யம்​மன் கோயில் கும்​பாபிஷேக விழா நேற்று நடை​பெற்​றது.

இவ்​விழா​வில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் கலந்து கொண்​டார். அதைத் தொடர்ந்​து, அம்​பத்​தூர் வெங்​க​டாபுரத்​தில் உள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேக விழா​வில் அமைச்சர் ரமேஷ், சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஜி.​பால​முரு​கன் ஆகியோர் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

அப்​போது செய்​தி​யாளர்களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்​தில் எந்​தெந்​தக் கோயில்​களில் கும்​பாபிஷேகம் நடத்​தப்​ப​டா​மல் இருக்​கிறதோ, அங்​கெல்​லாம் கும்​பாபிஷேகம் நடை​பெறு​வதற்​கான ஆயத்​தப்பணி​களை மேற்​கொண்​டுள்​ளோம்.

அதே​போல், எங்​கெல்​லாம் கோயில்​கள் கண்​டு​கொள்​ளப்​ப​டா​மல் இடிந்த நிலை​யில் இருக்​கிறதோ அந்த கோயில்களின் பட்​டியலை தயார் செய்து வரு​கிறோம். அந்​தக் கோயில்​களில் சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு கும்​பாபிஷேகங்​கள் நடத்​தப்​படும்.

வழி​பாடு​களே இல்​லாமல் பல கோயில்​கள் உள்​ளன. அந்த கோயில்​கள் அனைத்​தை​யும் வழி​பாட்​டுக்கு கொண்டு வரும் முயற்​சி​யில் ஈடு​பட்​டிருக்​கிறோம்.

திருச்​செந்​தூர் முரு​கன் கோயி​லில் சிறப்பு தரிசனக் கட்​ட​ணம் உள்பட எந்த கட்​ட​ணத்​தை​யும் நாங்​கள் உயர்த்​த​வில்​லை. அந்​தக் கோயி​லில் 20-க்​கும் மேற்​பட்ட சேவை​கள் உள்​ளன. அவை அனைத்​தும் அதே கட்​ட​ணத்​தில்​தான் நீடிக்​கிறது.

இந்​நிலை​யில், நிர்​வாகரீ​தி​யாக சில முறை​கேடு​கள் திருச்​செந்​தூர் முரு​கன் கோயி​லில் இருந்​தது தெரிய​வந்​தது. மக்களிடம் கருத்துக்கேட்பு எனவே, சேவைக் கட்​ட​ணங்​களை உயர்த்த கோயில் நிர்​வாகத்​தால் பரிசீலனை செய்​யப்​பட்​டது.

இதுதொடர்​பாக பொது​மக்​களிட​மும் கருத்து கேட்​கப்பட்​டிருக்​கிறதே தவிர, கட்​ட​ணம் இன்​னும் உயர்த்​தப்​பட​வில்​லை. கருத்​துக்​கேட்​பில், பொது​மக்​கள் கட்​ட​ணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்​னால், நாங்​கள் உயர்த்த மாட்​டோம். பொது​மக்​களின் கருத்​துக்கு மாறாக இந்த அரசு எந்த முடிவை​யும் எடுக்​காது.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன கட்டணங்கள் உயர்வா? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
3 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் தற்போது நடவடிக்கை ஏன்? - செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கில் நீதிபதி கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in