3 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் தற்போது நடவடிக்கை ஏன்? - செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கில் நீதிபதி கேள்வி

3 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் தற்போது நடவடிக்கை ஏன்? - செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கில் நீதிபதி கேள்வி
Updated on
1 min read

மதுரை: கரூரில் 3 ஆண்​டு​களுக்கு முன்பு வரு​மானவரித் துறை அதி​காரி​கள் மீது தாக்​குதல் நடத்​திய வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் மீது தற்​போது நடவடிக்கை எடுப்​பது ஏன் என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

கரூரைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மார் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த முன்​ஜாமீன் மனு: கரூரில் கடந்த 2023 மே 26-ல் எங்​கள் அலு​வல​கத்​தில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். அப்​போது அங்கு வந்த திமுக​வினர் வரு​மானவரித் துறை அதி​காரி​களைப் பணி செய்​ய​வி​டா​மல் தடுத்​த​தாக​வும், தவறான வார்த்​தைகளால் திட்​டிய​தாக​வும், அதி​காரி​களின் மடிக்​கணினி மற்​றும் 5 பென் டிரைவ்​களை பறித்​துச் சென்​ற​தாக​வும் கூறி வரு​மானவரித் துறை உதவி இயக்​குநர் கிருஷ்ண​காந்த் போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இப்​பு​காரின்​பேரில் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் என்​னை​யும் போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர். ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால் அரசி​யல் முன்​விரோதம் காரண​மாக என்​னை​யும் வழக்​கில் சேர்த்​துள்​ளனர். விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு வழங்கி வரு​கிறேன். எனவே, வழக்​கில் கைதா​காமல் இருக்க முன்​ஜாமீன் வழங்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், 2023-ல் சம்​பவம் நடை​பெற்​ற​போது மனு​தா​ரர் அங்கு இல்​லை. பிரச்​சினை செய்​யத் தூண்​டிய​தாகவே மனு​தா​ரர் வழக்​கில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதனால் முன்​ஜாமீன் வழங்க வேண்​டும் எனக் கூறப்​பட்​டது. அரசுத் தரப்​பில், பதில் மனுத் தாக்கல் செய்ய கூடு​தல் அவகாசம் கோரப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி, இந்த வழக்கு 3 ஆண்​டு​களாக நிலு​வை​யில் உள்ளது. இந்த வழக்​கில் போலீ​ஸார் தற்​போது தீவிரம் காட்​டு​வது ஏன், கொலை வழக்​கு​களி​லேயே மறு​நாள் பதில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் அவகாசம் கோரு​வது ஏன் எனக் கூறி விசா​ரணையை இன்​றைக்கு தள்ளி வைத்​தார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை கரூர் டவுன் போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்காக அசோக்குமாரைத் தேடி கரூர் போலீஸார் சென்னைக்கு வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் தற்போது நடவடிக்கை ஏன்? - செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கில் நீதிபதி கேள்வி
தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in