“அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்” - பழநி நில முறைகேடு குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம்

அமைச்சர் ரமேஷ்

அமைச்சர் ரமேஷ்

Updated on
1 min read

திருச்சி: பழநி கோயில் நிலம் விவ​காரத்​தில் அப்​படி ஒரு நிலம் இருப்​பதே எனக்கு இந்த பிரச்​சினை வந்த பின்பு தான் தெரி​யும் என அமைச்​சர் எஸ்​.ரமேஷ் தெரி​வித்​தார்.

திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பழநி கோயில் நிலம் விவ​காரத்​தில் குற்​ற​வாளி​கள் யாராக இருந்​தா​லும் தண்​டிக்​கப்​படு​வார்​கள். ஆனால் அரசி​யல் நோக்​கத்​துக்​காக சிலர் என் மீது பழி போடு​கிறார்​கள்.

இவ்​வழக்கை சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும் என்று நான் தான் முதல்​வரிடம் தெரி​வித்​தேன். அங்கே அப்​படி ஒரு நிலம் இருப்​பதே எனக்கு இந்த பிரச்​சினை வந்த பின்பு தான் தெரி​யும்.

நீட் விவ​காரத்​தில் மாணவர்​களின் போராட்​டத்​துக்கு நியாய​மான ஆதரவை தரு​கிறோம் என்று ஏற்​கெனவே முதல்​வர் தனது நிலைப்​பாட்டை தெரி​வித்​து​விட்​டார்.

நீட் தேர்வு முற்​றி​லும் அகற்​றப்பட வேண்​டும். கல்​வியை மாநில பட்​டியலுக்கு கொண்டு வரு​வதே நிரந்தர தீர்வு என்​றும் ஏற்​கெனவே முதல்​வர் தெளி​வாக தெரி​வித்​து​விட்​டார். அதற்​கான முயற்​சியை மேற்​கொண்டு வரு​கிறோம். இவ்​வாறு கூறி​னார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ரமேஷ்</p></div>
“சோனம் வாங்சுக்கின் தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” - சிஜேபி புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in