தேர்தல் ஆணையரை மாற்றக்கோரும் திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

தேர்தல் ஆணையரை மாற்றக்கோரும் திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
Updated on: 
1 min read

சென்னை: தேர்தல் ஆணை​யரை மாற்​றக்​கோரும் திசை​திருப்​பும் அரசி​யலுக்கு தவெக இரை​யா​காது என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக நேற்று பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த ஆண்டு இதே நாளில் மறக்க முடி​யாத மிகப்​பெரிய துயரத்தை நாங்​கள் எதிர்​கொண்​டோம்.

இன்​றைய தினம் கரூரில் நினை​வஞ்​சலி செலுத்​தப்​படு​கிறது. பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு என்​னென்ன உதவி​கள் தேவையோ, அவை அனைத்​தும் செய்​யப்​படும். அதற்கு நாங்​கள் கடமைப்​பட்​டிருக்​கிறோம்.

எஸ்​ஐஆர்-ஐ நாங்​கள் எதிர்க்​கிறோம். தேர்​தல் ஆணை​யரை தனி​நப​ராக மாற்​றி​னால் மட்​டும் பிரச்​சினை முடிந்​து​ வி​டாது. திசை​திருப்​பும் அரசி​யலுக்கு தவெக இரை​யா​காது.

எஸ்​ஐஆரை எதிர்க்​கிறோம்

நாங்​கள் ஆட்​சிக்கு வரு​வதற்கு முன்பே தவெக தலை​வர் இதுதொடர்​பாக அறிக்கை வெளி​யிட்​டார். அதில் தெளி​வாக எஸ்​ஐஆரை எதிர்க்​கிறோம் என பதிவு செய்​துள்​ளோம்.

எஸ்​ஐஆர் பணி​களில் சீர்​திருத்​தம் வேண்​டும் என்று அப்​போதே அவர் கூறி​யிருந்​தார். அதே நிலைப்​பாட்​டில் தான் நாங்​கள் இன்​றும் இருக்​கிறோம்.

அரசி​யலுக்​காக போராட்​டம் நடத்​தி, அறிக்கை விடும் கட்சி தவெக அல்ல. எஸ்​ஐஆர் பணி​களின் போது குறிப்​பிட்ட வாக்கு​கள் நீக்​கப்​பட்​டன.

அவ்​வாறு நடைபெறாமல் இருந்​திருந்​தால் பெரு​வாரி​யான வாக்​கு​களில் தவெக வெற்றி பெற்​றிருக்​கும். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

தேர்தல் ஆணையரை மாற்றக்கோரும் திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
சென்னையில் அக்.2-ம் தேதி அண்ணாமலை தலைமையில் அறியப்படாத சாதனை பெண்களுக்கு விருது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in