மாணவர்களிடம் சாதி ரீதியான தாக்குதல்: தவறு செய்தவர் மீது நடவடிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் |கோப்புப் படம்

பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் |கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: பள்​ளி​களில் மாணவர்​கள் மீது சாதி ரீதி​யாக தாக்குதல் நடை​பெறு​வது வேதனை அளிக்​கிறது. இதில் தவறு செய்​தது யாராக இருந்​தா​லும் நேர்​மையான விசா​ரணை நடத்தி நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார்.

இது​குறித்து அமைச்​சர் ராஜ்மோகன் சென்​னை​யில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய​தாவது: பள்​ளி​களில் மாணவர்கள் மீது சாதி ரீதி​யாக தாக்​குதல் நடை​பெறு​வது வேதனை அளிக்​கிறது. இத்​தகைய செயல்​பாடுகளில் தவறு செய்தது யாராக இருந்​தா​லும், அவர்​கள் எந்த பின் புலத்​தில் இருந்து வந்தா​லும் நேர்​மையான விசா​ரணை நடத்தி நட​வடிக்கை எடுக்​கப்​படும்.

மாணவர்கள் உடல் நலத்​துக்கு உடற் கல்வி வகுப்​பு​கள் உள்​ளது போல், மனநலன் குறித்து எடுத்​துரைக்க ஆசி​ரியர்​கள் தொலைநோக்கு பார்வையுடன் இலக்​குகளை நிர்​ணயிக்க வேண்டும். தமிழகத்​தில் குழந்​தைகள் காணா​மல் போகும் விவகாரத்தை காவல்​துறை தீவிர​மாக அணுகு​கிறது. நகரங்​களில் உள்​ளது போலவே கிராமங்​களி​லும் சிசி​டிவி அமைக்க காவல்துறை அறி​வுறுத்து​கிறது.

மேலும் இந்த விவகாரம் தொடர்​பாக காவல்​துறை தீவிர​மான விசா​ரணை மேற்​கொண்​டுவரு​கிறது. பாலியல் வழக்​கு​கள் மீது தவெக அரசு உரிய நட​வடிக்கை எடுத்​து​ வரு​கிறது. தவெக நிர்வாகி​கள் பாலியல் சீண்​டலில் ஈடு​பட​வில்லை. தவெக ஆதரவு இணை​யதளங்​களில் தங்​களை இணைத்​துக் கொண்​ட​வர்​கள் எல்லாம் எங்​கள் கட்சி நிர்​வாகி​கள் இல்லை.

மாநக​ராட்சி சார்​பாக நடை​பெறும் ஆய்​வுகளில் மேயர் பிரியாவுக்கு அழைப்பு விடுக்​காமல் அவரை புறக்கணிக்கவில்லை. கூப்​பிட்​டால் தான் வரு​வேன் என்று இருக்காமல், மரபையும் பார்க்​காமல் மேயர் பிரியா ஆய்​வுக்கு தாராளமாக வரலாம்.” இவ்​வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் |கோப்புப் படம்</p></div>
இந்து தமிழ் திசை ‘பெண் இன்று’ சார்பில் சென்னையில் இன்று மகளிர் திருவிழா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in