இந்து தமிழ் திசை ‘பெண் இன்று’ சார்பில் சென்னையில் இன்று மகளிர் திருவிழா

கலை நிகழ்ச்சிகள், பரிசுகளுடன் கொண்டாட்டம்
காவல்​துறை முன்​னாள் கூடுதல் இயக்​குநர் வே.வனிதா ஐ.பி.எஸ்.

காவல்​துறை முன்​னாள் கூடுதல் இயக்​குநர் வே.வனிதா ஐ.பி.எஸ்.

Updated on: 
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ சார்​பில் சென்​னை​யில் இன்று மகளிர் திரு​விழா நடை​பெறுகிறது. முற்​றி​லும் பெண்​களுக்​காக அசத்​தலான போட்​டிகள், பேச்​சரங்​கம், கலை நிகழ்ச்​சிகள், பரிசுகளு​டன் கொண்​டாட்​டம் நடை​பெறவுள்​ளது.

‘பெண் இன்று’ சார்​பில் இந்த ஆண்டு தூத்​துக்​குடி, கடலூர், மதுரை, வேலூர், கோவை ஆகிய நகரங்​களில் மகளிர் திரு​விழா நடைபெற்றது. அவற்​றைத் தொடர்ந்து சென்னை, திருவான்மியூரில் உள்ள வேல்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் மகளிர் திரு​விழா இன்று நடை​பெறவிருக்​கிறது.

காலை 9 மணிக்​குத் தொடங்​கும் இவ்​விழா மாலை வரை நடைபெறும். இவ்​விழா​வில், காவல்​துறை முன்​னாள் கூடுதல் இயக்​குநர் வே.வனிதா ஐ.பி.எஸ். சிறப்பு விருந்​தின​ராகக் கலந்துகொண்டு பெண்​களின் பாது​காப்பு குறித்து உரையாற்றுகிறார். பேச்​சரங்​கத்​தைத் தொடர்ந்து கண்​கவர் கலை நிகழ்ச்​சிகள் நடை​பெறும். வாசகியருக்கு ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்​தல், கயிறு இழுத்​தல் உள்​ளிட்ட கல​கலப்​பான பல்வேறு போட்​டிகளும் நடை​பெறவிருக்​கின்​றன.

போட்​டிகளில் வெற்றி பெறு​பவர்​களுக்​குச் சிறப்​புப் பரிசும், கலந்து கொள்​ளும் அனைவருக்​கும் பரிசுகளும் வழங்​கப்​படும். 85 வருட பாரம்​பரியம் மிக்க உதயம் இட்லி அரிசி, பருப்பு வகைகள் நிறு​வனத்​துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்து​கிறது. மேலும், லலிதா ஜூவல்​லரி, ஸ்ரீ ஐஸ்​வர்யா சாரீஸ், ரெபியூட் வாட்​டர், மஹாத்ரி ஃபுட்ஸ், ஹெல்த் பாஸ்​கெட், சத்யா ஏஜென்​சீஸ், ருச்சி ஊறுகாய், அட்​வென்​சர் மீடியா ஹவுஸ், வர்த்​த மானன் பதிப்​பகம், சௌபாக்யா என்​டர்​பிரைசஸ், காட்​டன் ஹவுஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி ஆகிய நிறு​வனங்​களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்​கு​கின்​றன.

இந்த நிகழ்ச்​சி​யின் டிவைன் பார்ட்​னர் கிரி, ஹெல்த் பார்ட்​னர் ரெயின்போ சில்​ரன்ஸ் ஹாஸ்பிடல்ஸ், வென்யூ பார்ட்​னர் வேல்ஸ் பல்​கலைக்​கழகம் - திரு​வான்​மியூர் வளாகம், பிவெரேஜ் பார்ட்​னர் கோத்​தாஸ் காபி. மகளிர் திரு​விழா​வில் பங்​கேற்​கும் வாசகி​கள் அனைவருக்​கும் மதிய உணவும் நிச்​சயப் பரிசும் உண்டு. மகளிர் திரு​விழா​வில் 18 வயதுக்கு மேற்​பட்ட பெண்​கள் அனைவரும் பங்​கேற்​கலாம். ஆண்​களுக்கு அனுமதி இல்லை. விழா​வில் பங்​கேற்க அனுமதி இல​வசம்.

<div class="paragraphs"><p>காவல்​துறை முன்​னாள் கூடுதல் இயக்​குநர் வே.வனிதா ஐ.பி.எஸ்.</p></div>
ஓய்வூதிய விண்ணப்பத்தை நவம்பர் முதல் இணைய வழியில்தான் சமர்ப்பிக்க வேண்டும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in