

சென்னை: தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பல் மருத்துவர் டி.கே.பிரபு. யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அவர் ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “மாரிதாஸ் எனக்கு எதிராக பொய்யான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயல்படுவதால் ரூ.1 கோடியை மானநஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.ஜி. திலகவதி விசாரித்தார். அப்போது மனுவை ஏற்று முறையாக விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.