“கள்ளக்குறிச்சி ‘குறுஞ்செய்தி’ சம்பவம் நடக்கவே இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

“கள்ளக்குறிச்சி ‘குறுஞ்செய்தி’ சம்பவம் நடக்கவே இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்
Updated on: 
1 min read

சென்னை: “கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் சம்பவமே நடக்கவில்லை” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் நாங்கள் அதையும் எதிர்கொள்வோம். ஆனால், அப்படி ஒரு சூழ்நிலை இப்போது கிடையாது. சட்டம் - ஒழுங்கு சரியில்லை என திமுக கட்டமைக்க முயல்கிறது” என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “6 மாத காலங்களில் தவெக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என திமுக கட்டமைக்க முயல்கிறது.

கடந்த ஆட்சி காலத்தில் காவல் துறைக்கு ஆட்களே எடுக்கவில்லை. ஆனால் தற்போது, அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடக்கிறது. முதல்வர் விஜய் அனைத்து விஷயங்களையும் நேரடியாக கையாளுகிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினை போல வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கவில்லை.

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் சம்பவமே நடக்கவில்லை. சமூக வலைதளத்தில் அந்தச் செய்தியைப் பார்த்ததாக கனிமொழி கூறியிருக்கிறார். கனிமொழி கூறியது தவறு. அடிப்படை உண்மைகளை சரிபார்க்காமல் சமூக வலைதளங்களில் பதிவு செய்வது பொறுப்பற்ற செயல். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான சூழல் இப்போது இல்லை. அவ்வாறு வந்தால் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்கள் ஊடகங்கள் மூலம் தவறாக கட்டமைக்கப்படுகிறது.

தீபாவளியன்று 8 கொலைகளும், தீபாவளி வாரத்தில் 40 கொலைகளும் நடந்துள்ளன. குற்றச் சம்பவங்களைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார். எந்த இடத்திலும் தவறு நடக்காமல் விரைவாகச் செயல்பட காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் ரோந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கள்ளக்குறிச்சி ‘குறுஞ்செய்தி’ சம்பவம் நடக்கவே இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் மீதான வழக்கு விசாரணையை தொடர அனுமதி

X