சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் மீதான வழக்கு விசாரணையை தொடர அனுமதி

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தகவல்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
Updated on: 
1 min read

சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஆணையர்களாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான குற்றவியல் வழக்கு விசாரணையை தொடர பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.

ரூ.98.25 கோடி மதிப்பிலான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஆணையர்களாக பணியாற்றிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி மற்றும் கே.விஜய கார்த்திகேயன் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குப் பதிய பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

‘குற்றவியல் வழக்குகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு விசாரணையை தொடர மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கடினமான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம்’ எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘ஏழை, எளியோருக்கு எதிராக மட்டும் வேகமாக சுழலும் சட்ட நடவடிக்கைகள், செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக நகருவதே இல்லை. இந்த நிலையை எட்டுவதற்கு நீதிமன்றம் மிகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் சுமார் 98 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
“கடும் குற்றச்சாட்டுக்கு ஆளான தவெக எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசா?” - முதல்வர் விஜய் மீது தினகரன் சாடல்

X