காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
Updated on
1 min read

சென்னை: காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று அவர் கூறியதாவது: காவல் மரணங்களில் போலீஸார் அல்லது சிறைத்துறை பணியாளர்கள் தவறு செய்திருந்தால் அரசு, அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கும்.

தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் தற்போது காவல் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. பாதிக்கப்பட்டவர்களுடன் துணை நிற்போம். புழல் சிறையில் ஒரு மரணம் சமீபத்தில் நடந்தது. அதுபற்றி விசாரணை நடைபெறுகிறது.

பட்ஜெட்டில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

திமுக-அதிமுக-பாஜக திட்டம்

திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் தங்கள் கட்சியை நடத்த முடியாமல் அடுத்த ஓராண்டில் பாஜகவிடம் இணைத்துவிடு வார்கள். அதிமுகவை பழனிசாமி மொத்தமாக அடமானம் வைத்துவிட்டார்.

ஸ்டாலின் திமுகவை என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறார். எங்கள் எம்எல்ஏ.க்களுக்கு ரூ.50 கோடி வரை விலை பேசினர். இந்த அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இரவு 9 மணி வரை பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது.

பதிவாளர்கள் பலரும் ஓய்வு பெற முடியாத நிலையில்தான் உள்ளனர். லஞ்சம் புரையோடிப் போய் இருந்த துறை பதிவுத்துறைதான். கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த மூர்த்தி, ஒவ்வொரு பதிவு அலுவலகத்துக்கும் ஒருவரை நியமித்து ‘அமைச்சர்கட்டிங்' வாங்கி கொண்டிருந் தார்.

இவ்வளவு மோசமான துறையை இந்த புதிய அரசு சீரமைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகள் பத்திரப் பதிவுத்துறையில் மோசடி நடைபெற்றுள்ளது.

பழநி பத்திரப் பதிவு விவகாரத்தில் எவ்விதத்திலும் அரசின் மையத்துக்கு தொடர்பு இல்லை.

நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவினரும், திமுகவைச் சேர்ந்தவர்களும் போலி பத்திரங்களை தமிழகம் முழுவதும் போட்டுள்ளனர். மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசு சட்டரீதியாக அணுகி வருகிறது. மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கும் நிலையில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in