பழைய சோறை தின​மும் சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பழைய சோறை தின​மும் சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: தின​மும் பழைய சோறு சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம். குறை பிரசவத்தை தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை சார்​பில் பழைய சோறு குறித்த அறி​வியல் கருத்​தரங்​கம் நடை​பெற்​றது.

தொடர்ந்​து, கலாநிதி வீரா​சாமி எம்​.பி.​யின் தொகுதி மேம்​பாட்டு நிதி​யில் பல் மருத்​துவ பிரி​வில், புதிய மருத்​துவ உபகரணங்​கள் மற்​றும் புனரமைப்பு பணி​கள் நடை​பெற்​றதை மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை​யில் கடந்த 5 ஆண்​டு​களாக மருத்​து​வர் ஜெஷ்வந்த் தீவிர முயற்​சி​யின் காரண​மாக பழைய சோறு பற்றி பல்​வேறு ஆராய்ச்​சிகளை மேற்​கொண்​டுள்​ளார்.

பழைய சோறில் பல்​வேறு சத்​துக்​களும் நல்ல பாக்​டீரி​யாக்​களும் நுண்​சத்​துக்​களும் இருப்பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. தின​மும் பழைய சோறு சாப்​பிடு​வ​தால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம். குடலின் நல்ல ஆரோக்​கி​யம் மற்​றும் உடல் பரு​மன் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ளலாம். கர்ப்​பிணி​கள் பழைய சோறு சாப்​பிடு​வ​தால் குழந்தை நன்​றாக வளர்​கிறது.

குறை பிரசவம், கர்ப்​ப​கால நீரிழி​வு, அதிக உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாது​காக்​கிறது. இதய நோயி​லிருந்து காப்​பாற்​றுகிறது. ரத்த கொழுப்பு அளவு​களை குறைக்​கிறது. கல்​லீரலில் உள்ள கெட்​டக் கொழுப்​பு​கள் மற்​றும் ஆபத்​தான அமிலங்​களை கல்​லீரலில் இருந்து வெளி​யேற்ற உதவு​கிறது.

அதிக வயிற்​றுப்​போக்கு உள்​ளவர்​களுக்கு குடலில் ஓர் அரணாக இருந்து நுண்​சத்​துக்​கள் மற்​றும் நீர்ச் சத்​துக்​கள் வெளி​யேறாமல் பாது​காக்​கிறது. வயிற்று வலி, மலச்​சிக்​கல், வயிறு வீக்​கம் போன்ற நோய்​களி​லிருந்து குண​மாக உதவு​கிறது. உடல் நலத்​துக்கு பாது​காப்​பான மிகச்​சிறந்த உணவாக பழைய சோறு இருக்​கிறது.

பழைய சோறு தினம் குறித்து முதல்​வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் கலாநிதி வீரா​சாமி எம்​.பி., ஐட்​ரீம் இரா.மூர்த்தி எம்​எல்ஏ, சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண்​தம்​பு​ராஜ், மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் அரவிந்த், மருத்​து​வ​மனை கண்​காணிப்​பாளர் ஜோதி​கு​மார், ஆர்​எம்ஓ வனிதா மலர், குடல் அறுவை சிகிச்சை பிரிவு இயக்​குநர்​ ஜெஸ்​வந்த்​ உள்​ளிட்​ட பலர்​ பங்​கேற்​றனர்​.

பழைய சோறை தின​மும் சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் குறித்த தொழில்நுட்ப கண்காட்சி: அமைச்சர்கள் திறந்துவைத்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in